18-11-21/ 12.50pm
தமிழ் செய்திகள் ; கருத்து வேறுபாடு தேச துரோகமல்ல. கிண்டல் செய்வது குற்றமல்ல என கூறிய ராஜ்தீப் சர்தேசாயை நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
ஸ்டேண்ட் அப் காமெடி நடிகர் மற்றும் கலைஞரான வீர் அப்துல் என்பவர் தொடர்ந்து இந்து தெய்வங்களையும் இந்தியாவையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் தனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். இதை பொதுமக்கள் பலர் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூகத்தில் மிக அந்தஸ்துள்ள பொறுப்பில் உள்ள அனுபவம் மிகுந்த மூத்த ஊடகவியலாளரான ராஜ்தீப் சர்தேசாய் வீர் அப்துல் பேசிய கருத்துக்களை ஆதரித்து பதிவிட்டிருக்கிறார். மேலும் கங்கனா ரணாவத் மீது வழக்கு தொடுங்கள் என கூறியிருக்கிறார்.
இவரது ஒருதலைப்பட்சமான பதிவு நெட்டிசன்களை கொந்தளிக்கவைத்திருக்கிறது. ராஜ் தீப் தனது ட்விட்டரில் ” துஷ்பிரயோகம் செய்வதன் மூலம்/வழக்குகளை பதிவு செய்ய முயல்வதன் மூலம்
வீர் தாஸ் மீது அவரது விமர்சகர்கள் அவரது கருத்தை மட்டுமே நிரூபிக்க முயல்கிறார்கள்.
நையாண்டி ஒரு குற்றம் அல்ல, கருத்து வேறுபாடு தேச விரோதம் அல்ல. சிலருக்கு கோபம் வரலாம் அல்லது மனதை புண்படுத்தலாம் ஆனால் அது வெறுப்பு பேச்சு அல்லது வன்முறையை தூண்டுவது அல்ல. ஸ்டேண்ட் அப் கலைஞர்களுக்கு கடவுளுக்கு நன்றி.
மேலும், அதே வாதம் கங்கனா ரணாவத்துக்கும் பொருந்தும். நடிகரின் கருத்துக்களுக்காக அவரை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமையும் உள்ளது, அதே போல கங்கனா செய்தது உண்மையான மிரட்டல் எனில் அவர்மீதும் வழக்கு தொடுப்பதை பற்றி சிந்தியுங்கள்” என குறிப்பிட்டிருக்கிறார். இதற்க்கு பலர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா