Friday, March 29, 2024
Home > செய்திகள் > தென்காசி அருகே பரிதாபம்..! சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்..!

தென்காசி அருகே பரிதாபம்..! சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்..!

4-11-21 / 20.36pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்த நிகழ்ந்துள்ளது. தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சிக்கியவர்களை மீட்க போராடி வருகின்றனர்.

தென்காசியில் இது குளுகுளு சீசன் காலம். பொதுவாக இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் லட்சக்கணக்கில் குற்றாலத்தில் குவிந்த வண்ணம் இருப்பர். இந்த வருடம் கொரோனாவை காரணம் காட்டி திமுக அரசு தடைவிதித்துள்ளது. அதனால் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தென்காசி மாவத்தில் உள்ள அணைகள் ஆறுகள் என செல்கின்றனர்.

தற்போது தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது. அணைகள் நிரம்பி வழிகின்றன. முக்கியமான கிருஷ்ணா நதி ராமநதி பேச்சிப்பாறை அடவி நயினார் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

`

இன்று தீபாவளியாதலால் விடுமுறையை கொண்டாட தென்காசி சுற்றுவட்டார மக்கள் கடையநல்லூர் பகுதியில் அமைந்துள்ள கல்லாறு பகுதிக்கு பொதுமக்கள் பலர் சென்றனர். அப்போது எதிர்பாராவண்ணம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.

அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். கல்லாருக்கு செல்லும் இரண்டு வலிகள் பெருத்த சேதமடைந்து வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்பட்டிருப்பதால் மக்களை மீட்க பெருத்த சிரமம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து மக்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடையநல்லூர் பகுதி பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

```
```

…..ஸ்டீபன் தங்கதுரை

#flood #tenkasi #kadayanallur #kallaru #flood