Saturday, October 5, 2024
Home > செய்திகள் > மொசாட் அதிரடி..! பணிந்த துருக்கி அதிபர் எர்டகான்..!

மொசாட் அதிரடி..! பணிந்த துருக்கி அதிபர் எர்டகான்..!

18-11-21/14.36pm

இஸ்ரேல் : இஸ்ரேல் அரசு மற்றும் மொசாட் அமைப்பின் மறைமுக உதவியால் இருவர் துருக்கி சிறையிலிருந்து மீட்கப்பட்டனர்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தம்பதிகள் மோர்டி மற்றும் நடாலி ஓக்னின் இவர்கள் இருவரும் துருக்கி நாட்டிற்கு கடந்த வாரம் சுற்றுப்பயணம் சென்றனர். இஸ்தான்புல்லில் உள்ள அதிபர் எர்டகான் அரண்மனை அருகே சென்ற போது அந்த மாளிகை முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதை கவனித்த அதிபரின் அதிகாரிகள் தம்பதிகளை கைது செய்தனர். அவர்களை சிறையிலடைக்குமாறு அதிபர் எர்டகான் உத்தரவிட்டார். இதனால் தம்பதிகளுக்கு 15 வருடங்கள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டது.

`

இந்த தகவல் மொசாட் அமைப்பின் மூலம் இஸ்ரேல் பிரதமருக்கு அனுப்பபட்டது. இஸ்ரேல் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் மொசாட் அமைப்பினர் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிபர் எர்டகான் தம்பதிகளை விடுவிக்க கட்டளை பிறப்பித்தார்.

அதை தொடர்ந்து இஸ்ரேல் அரசு தனிவிமானத்தை தம்பதியினரை மீட்டுவர அனுப்பியது. தம்பதிகளான நடாலி மற்றும் ஓக்னின் சற்று முன்னர். பத்திரமாக இஸ்ரேல் திரும்பினர். பென்குரியன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தம்பதியினர் ” எங்களை பத்திரமாக மீட்ட பிரதமர் நதாலி பென்னட் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி.

```
```

நாங்கள் புகைப்படம் எடுத்தது தவறு என கூறிய அதிகாரிகள் எங்களை உளவாளிகளை போல நடத்தினர். 15 வருடங்கள் சிறையில் கழிக்க போகிறோம் என நினைத்தோம்.

ஆனால் நமது அதிகாரிகள் காப்பாற்றிவிட்டனர்.
இஸ்ரேல் மக்களுக்கும் அரசுக்கும் எங்களது நன்றிகள்.” என தெரிவித்தனர்.

…….உங்கள் பீமா