Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > பிஜேபி வெளியிட்ட ஆதாரம்…!பாகிஸ்தான் அமைப்புக்கு நில ஒதுக்கீடா..? சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்..!

பிஜேபி வெளியிட்ட ஆதாரம்…!பாகிஸ்தான் அமைப்புக்கு நில ஒதுக்கீடா..? சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்..!

3-1-22/16.42pm

சட்டீஸ்கர் : அரசில் மரபை தாண்டியும் இந்திய இறையாண்மைக்கு ஒவ்வாததையும் காங்கிரஸ் தோன்றிய காலத்திலிருந்தே அதன் தலைவர்கள் செய்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் வேளையில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஒரு இஸ்லாமிய அமைப்புக்கு காங்கிரசை சேர்ந்த அமைச்சர் ஒருவர் நிலத்தை வழங்கியிருப்பது பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தவாத் ஈ இஸ்லாமி எனும் இஸ்லாமிய அமைப்பு பாகிஸ்தானின் கராச்சி நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் கிளையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு சட்டீஸ்கர் காங்கிரஸ் போக்குவரத்து துறை அமைச்சரான மொஹம்மத் அக்பரை அணுகியதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்த நகர்வுகள் ஜோராக நடைபெற்றதாக தெரிகிறது.

`

மாசா எஜூகேஷனல் அண்ட் சோசியல் வெல்பேர் சொசைட்டி எனும் அமைபின் தலைவர் பைசல் ரிஸ்வி என்பவர் மூலம் மந்திரியை 28 டிசம்பர் 2021ல் சந்தித்து மனு கொடுக்க அதே நாளில் மந்திரி பச்சைக்கொடி காட்டியதாக சொல்லப்படுகிறது. அதற்க்கு அடுத்த நாளே 29 டிசம்பர் அன்று 25 ஏக்கர் நிலம் வழங்கி DM உத்தரவிட்டுள்ளார். இந்த வேகத்தை ஏழை எளிய மக்கள் பட்டா கேட்டு வாயிலில் நிற்கும்போது காண்பிக்கலாமே பாகிஸ்தான் இஸ்லாமிய அமைப்புக்கு அவசரம் அவசரமாக இடம் வழங்க வேண்டிய அவசியம் என்ன என பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் பிரிஜ்மோஹன் அகர்வால் கேள்வியெழுப்பியுள்ளார்.

```
```

மேலும் இதுகுறித்து மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதையடுத்து இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. சப் டிவிசனல் மாஜிஸ்திரேட் தேவேந்திர படேல் நிலம் வழங்க வெளியிட்டுள்ள அறிக்கையை ஆரம்ப நிலையிலேயே ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

…..உங்கள் பீமா