10-12-21/13.20PM
சென்னை : தமிழக ஊடகமான சன் செய்திகள் மற்றும் புதிய தலைமுறை செய்திகள் ஆகிய இரு நிறுவனங்கள் உண்மைக்கு புறம்பாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருவதாக நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று எழுத்தாளர் மாரிதாஸ் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி திடீரென கைது செய்யப்பட்டார். அதற்கான காரணங்களை கேட்ட பிஜேபி தலைவர்களுள் ஒருவரான டாக்டர் சரவணன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மார்டிதாஸ் கைதுக்கான காரணம் சரியாக வெளியில் சொல்லப்படவில்லை என்றாலும் புதிய தலைமுறை செய்திகள் சமபவத்தை மாற்றி திரித்துக் கூறியதாக சொல்லப்படுகிறது.
எழுத்தாளர் மாரிதாஸ் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்து பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்தததாகவும் இந்திய ராணுவத்திற்கு எதிரான கருத்துக்களை பேசியதற்காகவும் கைது செய்யப்பட்டிருப்பதாக பொய்யான செய்தியை வெளியிட்டிருக்கிறது. செய்தி நிறுவனமான ANI வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மை கூறப்பட்டிருக்கிறது.
முதுகுளத்தூர் மாணவன் மணிகண்டன் காவல்துறையால் தாக்கப்பட்டு இறந்ததாக மாரிதாஸ் வீடியோ வெளியிட்டதாகவும் அதனால் காவல்துறை கைது செய்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் புதிய தலைமுறையில் பணிபுரியும் நிருபரான நிரஞ்சன் என்பவர் மாரிதாஸ் கைதை மறைமுகமாக கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.


புதியதலைமுறை போன்ற செய்தியை திரித்து கூறும் ஊடகங்கள் பற்றி மத்திய அமைச்சரான தமிழகத்தை சேர்ந்த எல். முருகன் அவர்களின் காதுகளுக்கு சென்றிருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என ஊகங்கள் உலவுகின்றன.
…..உங்கள் பீமா