Friday, March 29, 2024
Home > செய்திகள் > மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்..! நாங்களா மண்வெட்டி எடுத்து தோண்ட முடியும்..? திமுகஅமைச்சரின் பேச்சால் சர்ச்சை..!!

மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்..! நாங்களா மண்வெட்டி எடுத்து தோண்ட முடியும்..? திமுகஅமைச்சரின் பேச்சால் சர்ச்சை..!!

11-11-21/ 18.20pm

சென்னை: சென்னையில் பெய்துவரும் கனமழையால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மலை வெள்ளம் புகுந்துள்ளது. திமுக அமைச்சர் நாங்கள் மண்வெட்டி எடுத்தா தோண்ட முடியும் என நிருபரிடம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் முடிச்சூர் மணிமங்கலம் சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடுப்பளவு நீரில் மூழ்கியுள்ளது. இந்த உள்ளாட்சி பகுதியில் நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. திமுக தரப்பில் எந்த ஒரு தலைவர்களும் வரவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வீட்டில் சிக்கிய பலர் வெளியில் வரமுடியாமல் தவித்து நிற்கின்றனர்.

இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை திமுக அமைச்சர் கேஎன் நேரு சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஏரிகள் குளங்கள் தூர்வாரவில்லை.பருவமழைக்கு முன்னரே தூர்வாரிவிட்டோம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறோம் என சொன்னீர்களே என கேட்டதற்கு,

`

நாங்க எங்க அப்படி சொன்னோம் அதிமுக ஆட்சியில் சரியாக தூர்வாரப்படவில்லை. நாங்களா மண்வெட்டி கொண்டு தூர்வாரமுடியும். 2700 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாயில் 770 கிலோமீட்டர்கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது.” என கூறினார்.

ஆனால் கால்வாய்கள் கழிவுநீர்ப்பாதைகள் எதுவும் சரிசெய்யப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை. சென்னை குரோம்பேட்டை அருகிலுள்ள கால்வாய்கள் கழிவு நீர்ப்பாதைகள் சுத்தம் செய்யப்படாததால் மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புயல் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எந்த புயல் என்றும் பெயர் சூட்டப்படவில்லை.

```
```

திமுகவின் ஒவ்வொரு செயலுக்குப்பின்னாலும் ஒரு உள்நோக்கம் ஒளிந்திருக்கும். ஒரு சுயலாபம் ஒளிந்திருக்கும் என பிஜேபியினர் விமர்சிக்கின்றனர்.

……உங்கள் பீமா