Sunday, October 1, 2023
Home > செய்திகள் > விமானப் படை பெண் அதிகாரிக்கு தடைசெய்யப்பட்ட ட்டூ பிங்கர் டெஸ்ட்டா..!? வலுக்கும் சர்ச்சை.!

விமானப் படை பெண் அதிகாரிக்கு தடைசெய்யப்பட்ட ட்டூ பிங்கர் டெஸ்ட்டா..!? வலுக்கும் சர்ச்சை.!

கோயம்புத்தூர் IAF இன்ஸ்டிட்யூட்டில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. கடந்த 10ம் தேதி சம்மந்தப்பட்ட பெண் அதிகாரி சில வலிநிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தனது அறையில் தூங்கியிருக்கிறார். அப்போது அவரது அறைக்குள் அத்து மீறி நுழைந்த ப்ளைட் லூட்டினென்டான அமிதேஷ் ஹர்முக் அந்த பெண் அதிகாரியை பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த பெண் அதிகாரி மறுநாள் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரை எடுத்துக்கொள்ளாத உயரதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை சமரசம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் விமானப்படைக்கு சொந்தமான மருத்துமனையில் அறிக்கையை மாற்றி எழுதி பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை கையெழுத்திட வற்புறுத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20 நாட்களாக எந்த ஒரு நியாயமும் கிடைக்காத விரக்தியில் பாதிக்கப்பட்ட அதிகாரி கோயம்புத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காந்திபுரம் காவல்துறையினர் செப்டம்பர் 26 அன்று அமிதேஷ் ஹர்முக்கை கைது செய்து சிறையிலடைத்தனர்.

`

தேஷ்முக்கின் வழக்கறிஞர் சுந்தரவடிவேலு தாக்கல் செய்த ரிட் மனுவில் “விமானப்படை அதிகாரியை கைது செய்ய காவல்துறையினருக்கு உரிமையில்லை” என கூறியிருக்கிறார். மேலும் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண் சம்பவத்தன்று தனது அறையில் நன்றாக தூங்கிவிட்டு மறுநாள் காலையிலேயே புகார் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தனது புகாரில் தன்னை ட்டூ பிங்கர் டெஸ்ட் எடுக்க சொல்லி கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டால் தடைசெய்யப்பட்ட ட்டூ பிங்கர் டெஸ்ட் எடுக்க முயன்றது மற்றும் இந்த கற்பழிப்பு வழக்கை தேசிய மகளிர் ஆணையம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது என மகளிர் ஆணைய அதிகாரி ரேகா வர்மா தெரிவித்தார். மேலும் தேசிய மகளிர் ஆணையம் கடந்த வியாழனன்று விமானப்படை உயர் அதிகாரி V.R சௌத்ரிக்கு ட்டூ பிங்கர் டெஸ்ட் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

```
```

மேலும் கோயம்புத்தூர் மஹிளா நீதிமன்றம் வழக்கை நேற்று இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்துள்ளது. அங்கு குற்றம் சட்டப்பட்டவருக்கு கோர்ட் மார்ஷல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

…..உங்கள் பீமா

#coimbatore #iaf #amiteshharmuk #flightlieutenant