10-12-21/12.02pm
மதுரை : திமுக ஆட்சியில் அடுத்த வழக்கு திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பிஜேபி தலைவர் டாக்டர் சரவணன் மீது பாய்ந்திருக்கிறது. அவர் மீது ஐந்து வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக பிஜேபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக மனித உரிமை தினமான இன்று மனித உரிமைகளை தமிழக அரசு பறிப்பதாக பிஜேபியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுகவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த கிஷோர் கே சாமி திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும் முதல் நபராக கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் வீடுபுகுந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு குண்டாஸ் சட்டம் போடப்பட்டது.

அடுத்த அரசியல் கைதாக பிஜேபி பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் வீடுபுகுந்து தரதரவென இழுத்து செல்லப்பட்டார். கேள்வி கேட்க முற்பட்ட பிஜேபி மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் காவல்துறையினரால் கீழே பிடித்து தள்ளப்பட்டதாக வீடியோ ஒன்று வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுகவின் தவறுகளையும் ஊழல்களையும் தொடர்ந்து பல வருடங்களாக சுட்டிக்காட்டி வந்த எழுத்தாளர் மாரிதாஸ் கல்யாணராமன் போலவே எந்த ஒரு அடிப்படை ஆதாரமோ அல்லது வாரண்டோ இல்லாமல் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று பிஜேபி தலைவர் மற்றும் சட்டமன்ற வேட்பாளருமான டாக்டர் சரவணன் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்திருக்கின்றனர். கைது செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மற்றும் அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தல் மற்றும் கூட்டம் சேர்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்ததாக சொல்லப்படுகிறது.

மனித உரிமைகள் பற்றி எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊருக்கு படம் சொன்ன திமுக தற்போது மனித உரிமைகளை மண்ணில் புதைத்துவிட்டு சர்வாதிகார போக்கில் செயல்படுவதாக பிஜேபியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா