23-11-21/19.59pm
திருப்பூர் : ஓடும் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் கையை மர்ம நபர் ஒருவர் வெட்டியது பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து தொடர் கொலை கொள்ளை சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. விடியல் அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சாந்தி சிரிக்கிறது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆடு திருடும் கும்பலை விரட்டி சென்ற காவல் துறை அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நேற்று கரூரில் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் வேன் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். திருச்சி காவல்துறை அதிகாரி கொலை வழக்கில் மூன்று அப்பாவி சிறுவர்களை குற்றவாளியாக நிறுத்தியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருவது கவனிக்க வேண்டிய ஒன்று.
இந்நிலையில் மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை, திமுகவினர் சென்ற சொகுசுகார் முந்திச்செல்ல முயன்ற போது, வழி கிடைக்காத ஆத்திரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரின் கையை ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சரின் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போயிருப்பது இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
…….உங்கள் பீமா
pls subscribe our news site www.madrastelegram.com