Wednesday, March 19, 2025
Home > அரசியல் > எங்கே தவறு..? அரசியல் நாடகம் போடும் திமுக..! வெளுத்துவாங்கிய அண்ணாமலை கே..!!

எங்கே தவறு..? அரசியல் நாடகம் போடும் திமுக..! வெளுத்துவாங்கிய அண்ணாமலை கே..!!

திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. அதை நம்பிய மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகாமல் இருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீதிபதி AK ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு நீட் தேர்வின் சாதக பாதகங்களை குறித்து அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.ஆனால் நீதிமன்றம் நீட் தேர்வை தடை செய்ய மாநில அரசுக்கு உரிமையில்லை என தெரிவித்துவிட்டது. அடுத்த அறிக்கையாக திமுக நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என அறிவித்தது.

அதையடுத்து மாணவர்கள் நம்பிக்கையுடன் நீட் தேர்வு ரத்தாகும் என காத்திருந்தனர். ஆனால் கையைவிரித்த திமுக அரசு தேர்வுக்கு சில நாட்களுக்கு முன் மாணவர்களை தேர்வுக்கு தயாராக சொல்லி அறிக்கை வெளியிட்டது.

`

இதனால் தேர்வு ரத்தாகும் என நம்பிய மாணவர் ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திமுக வழக்கம் போல சட்ட முன்வடிவு கொண்டுவருவோம் என கூறிவிட்டு நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் போட்டிருக்கிறது.

இதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கே அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சீனிவாசன் எம்.எல்.ஏ ஆகியோர் தங்களது செய்து வருகின்றனர். பிஜேபி தலைவர் அண்ணாமலை கே அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் “அண்ணா அறிவாலயத அரசியல் நாடகம் அம்பலத்தில். இன்று தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்! இன்னொரு நாள், இன்னொரு பொய்.

அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் பொய்கள் மற்றும் புரட்டு! பண்ணை விவசாய சட்டம் தவறா? சிஏஏ தவறா? நீட் தவறா? எங்கே தவறு?” என பதிவிட்டிருக்கிறார்.

```
```

வானதி சீனிவாசன் அவர்கள் “NEET தேர்வை முன்மொழிந்தது யாரு? NEET தேர்வை முதன்முதலில் இந்தியா முழுவதும் நடத்தியது யாரு?” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மாணவனின் மரணத்திற்கு திமுகவே முழு பொறுப்பு” என கூறியுள்ளார்.

ஷ்யாம் கிருஷ்ணசாமி அவர்கள் தனது ட்விட்டரில் ” எவனாவது தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்வது தீர்வல்ல ன்னு சொல்றானா பாரேன்”. என பதிவிட்டுள்ளார்.

…உங்கள் பீமா