Thursday, May 21, 2026
Home > செய்திகள் > புலம்பும் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி..! முதல்வரா புரிஞ்சா தான் உண்டு..!

புலம்பும் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி..! முதல்வரா புரிஞ்சா தான் உண்டு..!

18-4-22/12.22PM

சென்னை : திமுக குடும்பத்தில் இருந்து மிகப்பெரிய மூன்று சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்திரைப்படங்களை தயாரிப்பதும் மாற்றமொழி படங்களின் விநியோக உரிமையை வாங்குவதும் என பிறருக்கு வாய்ப்பு தராமல் செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சன்பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மற்றும் க்ளவ்ட் நைன் என மூன்று நிறுவனங்கள் தற்போது தமிழ்திரையுலகை ஆட்டிப்படைத்து வருவதாக பெயர்வெளியிட விரும்பாத தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் புலம்பிவருகின்றனர்.

.

இதனிடையே நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் திமுகவை மறைமுகமாக சாடியுள்ளார்.

நிருபர் சினிமாவில் அரசியல் தலையீடு தற்போதும் உள்ளதா இப்போதைய அரசாங்கத்தின் மீதும் அந்த குற்றசாட்டு உள்ளதே என கேட்க ” ஆமா. கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு சினிமாக்காரனாக சொல்லவேண்டுமெனில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு நிலைமை வந்தது.

அதே நிலைமை தற்போது மெல்லமெல்ல வருகிறது. இதற்க்கு நடவடிக்கை எதுவும் எடுக்கமுடியாது. முதலமைச்சராக பார்த்து எதுவும் செய்தால் தான் உண்டு. முதல்வரே நிலைமையை புரிந்துகொண்டு செயல்படவேண்டும்” என பதிலளித்தார்.

மேலும் திமுக ஆட்சியில் இல்லாதபோது ஐந்து வருடங்களில் ஆறுபடங்கள் வெளிவந்தநிலையில் தற்போது ஒரே வருடத்தில் எட்டு படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா