Sunday, June 28, 2026
Home > அரசியல் > ராஜ்யசபா தேர்தல்..! காங்கிரசுக்கு ஹிண்ட் கொடுத்த ஹிமந்தா..!

ராஜ்யசபா தேர்தல்..! காங்கிரசுக்கு ஹிண்ட் கொடுத்த ஹிமந்தா..!

21-3-22/13.32pm

அஸ்ஸாம் : அஸ்ஸாம் மாநிலத்தின் இரண்டு ராஜ்யசபா சீட்டுக்களுக்கான தேர்தல் மார்ச் 31 நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களையடுத்து ராஜ்யசபா தேர்தல் நடைபெற இருக்கிறது.இதுதொடர்பாக முதல்வர் ஹிமந்தா கூறுகையில் ” காங்கிரசுக்கு தங்களின் எம்.எல்.ஏக்கள் பலர் பிஜேபியில் சேரப்போவது தெரியவில்லை. இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கான போட்டியில் நாங்கள் உறுதியாக வெல்வோம்.

பிஜேபி சார்பாக பபித்ரா கோர்காயை நிறுத்தியுள்ளோம்.கூட்டணிக்கட்சியான UPPL சார்பாக ருவங்கரா நர்சரி நிறுத்தப்பட உள்ளார்” என குறிப்பிட்டார். மேலும் காங்கிரசிலிருந்து பல மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பிஜேபி தலைமையை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 13 இடங்களில் இரண்டு ராஜ்யசபா சீட்டுக்கு அஸ்ஸாம் தயாராகி வருகிறது.

பதவிக்காலம் முடிய உள்ள இரண்டு ராஜ்யசபா எம்பிக்களும் காங்கிரசை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டுபேரில் ரிபுன் போரா மட்டுமே மீண்டும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

…..உங்கள் பீமா