Tuesday, December 10, 2024
Home > அரசியல் > முன்னாள் அமைச்சர் வழக்கில் திடீர் திருப்பம்…! திமுகவில் இப்படியும் ஒருவரா..?

முன்னாள் அமைச்சர் வழக்கில் திடீர் திருப்பம்…! திமுகவில் இப்படியும் ஒருவரா..?

11-01-22/10.28am

சிவகாசி : சிவகாசி பகுதியை சேர்ந்த ஒருவர் திமுக தலைமைக்கு எழுதிய கடிதம் தற்போது சிவகாசி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இவர்மீது மூன்று கோடி மோசடி வழக்கு திமுகவால் பதியப்பட்டது. அதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

கோயம்புத்தூர் நீலகிரி உள்ளிட்ட பல இடங்களில் சிறுமிகள் மர்மமான முறையில் இறந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையோ அரசோ இவ்வளவு தீவிரம் காட்டியதாக தெரியவில்லை என கூறப்படும் நிலையில் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க எட்டு தனிப்படை அமைக்கப்பட்டது. அதையடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் எனுமிடத்தில் முன்னாள் அமைச்சரை போலீசார் மூன்று வாரங்களிலேயே மடக்கிப்பிடித்தனர்.

`

இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக அமைச்சரின் உதவியாளர் அமைச்சருக்கே தெரியாமல் மோசடி வேலைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனிடையே சிவகாசி அனுப்பன்குளம் ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்த விநாயக மூர்த்தி திமுக தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ” நான் 15 வருடம் தீவிர திமுக தொண்டராக இருக்கிறேன்.

எங்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திமுக காழ்புணர்ச்சியோடு அவரை சிறையில் தள்ளவேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருவது எங்கள் மாவட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது. பட்டாசு தொழிலாளர் நலுனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் செய்துள்ளார். அவர் எங்கள் மண்ணின் மைந்தர். கட்சியின் நிர்வாகம் மற்றும் ஆட்சி நிர்வாகம் மீது திருப்தியில்லை என்கிற காரணத்தால் நான் எனது உறுப்பினர் அட்டையை ஒப்படைக்கிறேன்” என கூறியுள்ளார்.

```
```

திமுக உறுப்பினரின் இந்த செயல் மக்களிடையே பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளதுடன் திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளதாக அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா