Wednesday, March 19, 2025
Home > செய்திகள் > மண்டைக்காடு : பக்தர்கள் கைது..! கன்னியாகுமரி காவல்துறையின் அராஜகம்..!

மண்டைக்காடு : பக்தர்கள் கைது..! கன்னியாகுமரி காவல்துறையின் அராஜகம்..!

24-11-21/13.54pm

மண்டைக்காடு : மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கருவறையில் திடீரென தீப்பற்றியது. அதை தொடர்ந்து மேற்கூரை முழுவதும் தீயால் எரிந்து கருகியது. மூலவருக்கு எந்த சேதமுமில்லை. அதைத்தொடர்ந்து பிரசன்னம் பார்க்கப்பட்டு மூன்று கோடி செலவில் புனரமைப்பு பணி நடத்தப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 94 லட்சம் செலவில் சிறு சிறு பணிகளை மட்டும் முடித்துவிட்டு மேற்கூரையை பழையநிலையிலேயே விட்டுவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்று திமுக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மண்டைக்காடு சென்றார். அங்கு குழுமியிருந்த பக்தர்கள் சேகர் பாபுவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

`

மேலும் கோவில் வளாகத்தில் கலைஞர் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் புகைப்படம் கொண்ட விளம்பர பதாகை வைக்கப்பட்டு கோவில் திறப்புவிழா என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதில் சம்பந்தப்பட்ட மண்டைக்காடு அம்மன் படம் உள்நோக்கத்தோடு பொறிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது என கூறப்படுகிறது.

மேலும் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அமைச்சரை கண்டித்து கன்னியாகுமரி பிஜேபி வழக்கறிஞர் சிவகுமார், மற்றும் தர்மராஜ், இந்து முன்னணி சார்பில் மிசா சோமன் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் காளியப்பன் ஆகியோர் பொதுமக்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

```
```

கோவிலை புனரமைக்க கோரி கோஷம் எழுப்பிய பொதுமக்கள் உட்பட சிலர் மீது வழக்கு பதிந்து காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் காவல்துறை அதிகாரிகள் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

……உங்கள் பீமா