Friday, July 12, 2024
Home > செய்திகள் > சிக்கிக்கொண்ட தி ஹிந்து..! வெளியான பொய்ப்பிரச்சாரம்..!

சிக்கிக்கொண்ட தி ஹிந்து..! வெளியான பொய்ப்பிரச்சாரம்..!

6-3-22/10.12am

சென்னை : இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் ஊடகங்கள் ப்ரீபெய்ட் மீடியா போல செய்லபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் சமூகப்பொறுப்புள்ள நியூஸ் 7 போன்ற ஊடகங்கள் லாவண்யா மரண வழக்கில் உண்மைக்குப்புறம்பான செய்தியை வெளியிட்டிருந்தது.

மத்திய தகவல்தொடர்புத்துறை தரப்பில் அந்த செய்தி பொய்யென அறிவித்ததோடு மட்டுமல்லாமல் தனது கண்டங்களையும் பதிவுசெய்திருந்தது.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கித்தவிப்பதாக சொல்லப்படும் தமிழக மாணவர்களை காப்பற்ற தமிழக திமுக அரசு நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தது. (தமிழக முதல்வர் பதவியேற்றபோது பொருளாதார நிபுணர்கள் ஐந்துபேர் கொண்ட குழுவை நியமித்தது நினைவிருக்கலாம்.)

`

இந்த குழு உக்ரைனில் சென்று மாணவர்களை மீட்க அனுமதிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர். இதனிடையே பழம்பெரும் பத்திரிக்கை என கூறப்படும் தி ஹிந்து பத்திரிக்கையின் மற்றொரு பிரிவான பிசினெஸ் லைன் எனப்படும் கிளைபத்திரிக்கையின் நிருபராக உள்ள பார்வதி பிந்து என்பவர் எம்பி.கனிமொழியின் ட்வீட் ஒன்றை பகிர்ந்து ஒரு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு தமிழக அரசு பேருந்து அனுப்பியதாகவும் மாணவர்கள் அதன்மூலம் மீட்கப்பட்டதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற மாநிலங்களும் திமுகவை பின்தொடரவேண்டும் எனவும் விஷமத்தனமாக பதிவிட்டிருந்தார். ஆனால் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்க்ஷி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

```
```

பிசாசின் பகுதியிலிருந்து ஐந்து பேருந்துகள் மூலம் மாணவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். பிசாசின் பகுதியில் 1000 பேர்வரை சிக்கியிருப்பதாகவும் சுமி பகுதியில் 700 பேர்வரை சிக்கியிருப்பதாகவும் அவர்களும் மாலையில் அழைத்துவரப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் உண்மைக்கு புறம்பாக திமுகவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட தி ஹிந்து பத்திரிக்கை நிறுவனத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா