5-3-22/11.35am
கர்நாடகா : முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற பின்னர் போடப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும். அதனால் பெரும் அறிவிப்புகள் வெளிவரும் என மாநிலமே காத்திருந்தது. அதை பூர்த்தி செய்வது போல அமைந்திருந்தது நேற்றைய பட்ஜெட்.
பக்தர்களின் நீண்டகால கோரிக்கையான அரசுப்பொறுப்பிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்பதை ஏற்று இனி கோவில்கள் புனரமைப்பு மற்றும் இதர பணிகளுக்கான நிதியை அரசிடம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. மேலும் கோவில் நிர்வாக பொறுப்பிலிருந்து அரசு விலகுகிறது என்கிற அறிவிப்பை நேற்று பொம்மை வெளியிட்டுள்ளார்.

மேலும் காசி யாத்திரை செல்ல விரும்பும் பக்தர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியும் உத்தரவிட்டுள்ளார். இதுவரை வழங்கப்பட்டுவந்த 5000 நிதி பக்தர் ஒருவருக்கு இனி 30000 வழங்கப்படும். கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கான காம்பன்சேஷன் 48000 திலிருந்து 60000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சகர்கள் உட்பட கோவில் பணியாளர்களுக்கு மாத ஊதியம் அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசிடமிருந்து கோவில்களை முழுமையாக விடுவிக்க வெகுவிரைவில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் முன்பே சட்டவரைவு மாதிரி கொண்டுவரப்படும் எனவும் இது ரைட் ஆப் பிரீடம் ஆப் ரிலீஜியன் பில் 2021 படி தாக்கல் செய்யப்படும் எனவும் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
……உங்கள் பீமா