Wednesday, March 19, 2025
Home > செய்திகள் > நீங்களெல்லாம் மனித உரிமை தின வாழ்த்து சொல்லலாமா..? முதல்வரை கிழித்தெடுத்த நெட்டிசன்கள்..!

நீங்களெல்லாம் மனித உரிமை தின வாழ்த்து சொல்லலாமா..? முதல்வரை கிழித்தெடுத்த நெட்டிசன்கள்..!

11-12-21/10.08am

மேற்கு வங்கம் : மேற்கு வாங்க முதல்வர் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரான மமதா பானர்ஜி நேற்று மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி பதவியேற்ற நாளில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இரு நூறுக்கும் மேலான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அறுபது வயது மூதாட்டி தனது பேரன் பேத்திகள் கண்முன்னரே கற்பழிக்கப்பட்ட அவலமும் நடந்தேறியது. பத்து வயது சிறுமியை கூட விட்டு வைக்கவில்லை திரிணாமூல் குண்டர்கள். சிறுமியின் தாயையும் சிறுமியையும் ஒருசேர கற்பழித்து சிறுமியை இரக்கமின்றி கொன்றனர்.

இந்துக்கள் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேலானோர் அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக சென்றனர். பல நூறு பேர் கொல்லப்பட்டனர். ஆனால் விலை போன ஊடகங்கள் பிரதமர் மோடியின் ஷூவின் விலை என்ன அவர் உண்ணும் உணவு என்ன வெளிநாடுகள் பயணம் ராகுல் காந்தியின் அர்த்தமற்ற பேச்சுக்கள் என அதயே திரும்ப திரும்ப காட்டி உண்மையை மறுத்துவிட்டனர்.

`

மேலும் மேற்கு வங்கத்தில் நுழைந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் தேசிய மனித உரிமைகள் கழக ஆணையத்தின் அதிகாரிகள் திரிணாமூல் குண்டர்களால் அடித்து விரட்டப்பட்டனர். இந்த அசமபவிதங்களுக்கு பலியான நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய மமதா அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார். ஆனால் நேற்று அவர் பதிவில் ” மனிதம் அனைத்துக்கும் மேலானது ” என கூறி நாடகமாடியிருக்கிறார்.

```
```

இதனால் கொதித்த நெட்டிசன்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர். பல உயிர்களை பலிவாங்கிய மம்தாவுக்கு மனித உரிமை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வியெழுப்புகின்றனர்.

….உங்கள் பீமா