25-3-22/10.22AM
புதுதில்லி : நேற்று ராஜ்யசபாவில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எதிர்கட்சியினரின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் நிதி மற்றும் திட்டங்களை பொறுத்தவரையில் மாநில பாகுபாடு எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.
ராஜ்யசபாவில் பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பினர். அதற்க்கு பதிலளித்த அமைச்சர் ” நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் ஆகியவற்றில் மாநில பாகுபாடு எதுவும் இல்லை. மேலும் ரயில்வேத்துறை தனியாருக்கு மாற்றப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. 2009-14 காலகட்டத்தில் 2,42,709 நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஆனால் அதுவே 2014 முதல் இரட்டிப்பாகியிருக்கிறது. 3,44,646 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,40,713 நியமங்களுக்கான செயல்முறை நடைபெற்று வருகிறது. 2009-14காலகட்டத்தில் ரயில்வேத்துறையில் முதலீடு 45,980 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 2014 ல் இருந்து பிஜேபி ஆட்சியில்,511கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இன்று அது 2,45,800 கோடியாக உள்ளது. 25 நாடுகள் ஏற்கனவே அதிவேக ரயில்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஜப்பானில் இயங்கிவரும் E5 தொடர் ரயில்கள்தான் இந்தியாவுக்குள் கொண்டுவரப்படும்” என தெரிவித்தார்.
….உங்கள் பீமா
