Wednesday, June 3, 2026
Home > செய்திகள் > நாலாயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்த திமுக..! திமுக அமைச்சரின் பதிலால் எழுந்த சர்ச்சை..!

நாலாயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்த திமுக..! திமுக அமைச்சரின் பதிலால் எழுந்த சர்ச்சை..!

2-11-21 / 10.00am

நாலாயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட அவலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை பற்றி கேட்ட நிருபர்களிடம் எனக்கு எதுவும் தெரியாது என் காதுகளுக்கு வரவில்லை என கூறிய திமுக அமைச்சரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்கள் பசியின்றி வயிறார உணவருந்த மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது அம்மா உணவகம். திமுக ஆட்சிக்கு வந்த முதல்நாளே சென்னையில் பல இடங்களில் அம்மா உணவகம் சூறையாடப்பட்டது.

தமிழகத்தின் பல இடங்களில் எந்தவித முன்னறிவிப்புமின்றி அம்மா உணவகங்கள் மூடப்பட்டிருப்பதாக அதிமுகவினர் குற்றம்சுமத்தி வருகின்றனர். இதனால் ரோட்டோரம் வசிக்கும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கூலி வாங்கி வயிறுப்பிழைப்பை நடத்தும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அம்மா உணவகம் வரப்பிரசாதமா அமைந்திருந்தது.

அதையும் இழுத்துமூடி திமுக அரசு ஏழைகளை இன்னல்களுக்குள்ளாக்குவதாக விமர்சிக்கின்றனர். இந்நிலையில் எந்த ஒரு அறிவிப்புமின்றி நாலாயிரம் அம்மா உணவாக பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 4000 குடும்பங்கள் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்அவர்களிடம் கேள்வியெழுப்பியபோது ” எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது. என் காதுகளுக்கு அந்த செய்தி வரவில்லை. எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி என்று தினமும் பார்க்கும் ஆள் நான் இல்லை” என அசட்டையாக பதிலளித்தது நிருபர்களை அதிர்ச்சியடைய செய்தது.

தமிழக நிதியமைச்சரின் இந்த பொறுப்பற்ற பதில் எதிர்கட்சிகளால் விமர்சனத்துக்குள்ளானது. இதுகுறித்து தமிழக முதல்வர் விசாரித்து வேலை இழந்த அம்மா உணவக பணியாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு மாற்று வழி ஏற்பாடு செய்து தரவேண்டும் என நாலாயிரம் குடும்பங்களும் கோரிக்கை வைக்கின்றன.

….உங்கள் பீமா

#தமிழகநிதியமைச்சர் #அம்மாஉணவகம் #4000பணியாளர்கள் #வேலைநீக்கம் #dmk #fm #ptr #ammacanteen