Tuesday, October 15, 2024
Home > செய்திகள் > 4500 கோவில்களில் அறங்காவலர் நியமனம்..! உங்கள் பகுதியில் நீங்கள் இருக்கிறீர்களா..?

4500 கோவில்களில் அறங்காவலர் நியமனம்..! உங்கள் பகுதியில் நீங்கள் இருக்கிறீர்களா..?

20-12-21/13.57pm

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4,556 கோயில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 44,288 கோவில்கள் இருப்பதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோவில்கள் அனைத்தும் கோவில்கள் பெறும் வருவாய் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால், கோயில்களின் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதிலும், வரவு-செலவு கணக்குகளை கவனிப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று 2019ல் உத்தரவிட்டது. அதிமுக ஆட்சிகாலத்தில் அறநிலையத்துறை சார்பில் மாவட்ட குழு விரைவாக அமைக்கப்பட்டு பின்னர் தொடர்ந்து அறங்காவலர் குழுவை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்காமல் காலம்தாழ்த்தியது.

`

மேலும் இந்துசமய அறநிலையத்துறை கோவில்களில் உள்ள இருப்பு தங்கத்தை உருக்கும் திட்டத்தை அறிவித்தது. அதற்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அறங்காவலர்கள் இல்லாமல் தங்கநகைகளை உருக்க நீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் அறநிலையத்துறை அறங்காவலர்கள் நியமிக்கும் பணியை முடுக்கிவிட்டது. இந்த நிலையில் பெரிய கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கான பட்டியல் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் அந்த கோயில்களில் நியமனம் செய்யப்படவுள்ள அறங்காவலர்கள் தொடர்பான விவரங்களை திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என தெரிகிறது. இதனிடையே பத்தாயிரத்துக்கு குறைவான வருமானம் வரும் கோயில்களில் மாவட்ட குழுக்களின் பரிந்துரையில் பேரில் மூன்று அறங்காவலர் குழுவை உதவி ஆணையர் அறிவிப்பார். இரண்டு லட்சம் வரை வருமானம் வரும் கோயில்களில் மாவட்ட குழுவிலும் மூன்று பேர் கொண்ட குழுவை இணை ஆணையர் நியமிக்கிறார்.

```
```

அதே போல பத்து லட்சத்துக்கு மிகாமல் வருமானம் வரும் கோயில்களில் மாவட்ட குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் 3 பேர் கொண்ட குழுவை ஆணையர் நியமனம் செய்கிறார். எனவே, எந்தெந்த கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யலாம் என்பது தொடர்பான விவரங்களை அனுப்புமாறு அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், அறநிலையத்துறையில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக இத்துறை ஆளுகைக்கு உட்பட்ட கோயில்களில் சட்டப்பிரிவு 46 (i), 46 (ii), 46 (iii) வகை சார்ந்த கோயில்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்கப்படுகிறார்களா என்கிற சந்தேகம் வலுப்பதாக இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கிவருகின்றன. மேலும் கோவில்கள் இருக்கும் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த பொறுப்புக்கு விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

……உங்கள் பீமா