Tuesday, October 15, 2024
Home > செய்திகள் > தமிழக காங்கிரஸை புரட்டி எடுத்த நடிகை கஸ்தூரி..!

தமிழக காங்கிரஸை புரட்டி எடுத்த நடிகை கஸ்தூரி..!

1-11-21/ 21.10pm

தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தனுக்கு நக்கலாக பதிலளித்துள்ளார் நடிகை கஸ்தூரி. இது தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சியில் நவம்பர் 1 அன்று தமிழகநாள் என கொண்டாடப்பட்டது. திமுக ஆட்சி அமைத்த உடன் தற்போது தேதியை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழர்கள் விஷயத்தில் திராவிட கொள்கை கொண்ட திமுக தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என எதிர்கட்சிகள் பரவலான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

தமிழர் புத்தாண்டான சித்திரை 1ஐ மாற்றி தனது தமிழருக்கெதிரான கொள்கையை நிலைநிறுத்திக் கொண்டது. மேலும் தமிழ் மன்னர்களின் வரலாற்றை தமிழர் வரலாற்றை மழுங்கடிக்க செய்யும் முயற்சியில் திமுக இறங்கியிருப்பதாக தமிழர் அமைப்புகள் விமர்சித்து வருகின்றன. மேலும் தமிழ்நாடு நாள் மாற்றப்பட்டதை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் கண்டன குரல் எழுப்பிவருகின்றனர்.

`

இதனிடையே தமிழக காங்கிரஸ் துணைத்தலைவரான ராம சுகந்தன் “மொழிவாரிய மாநிலமாக
இந்தியா பிரிக்கப்படுவதற்க்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில்தான் காங்கிரஸ் இயக்கம் இயங்கியது.” என பதிவிட்டிருந்தார்.

இதற்கு நடிகை கஸ்தூரி “அட பாவத்தை. ஒரு காலத்துல எப்பிடி விவரமா சுயமா இயங்கியிருக்கு காங்கிரஸ் பார்ட்டி ! தமிழ்நாடு இல்லாத போதே காங்கிரஸ் இருந்துச்சு… ஆனா இப்போ தமிழ்நாடு பேரு இருக்கு, காங்கிரஸ் ஊரு பேரு அடையாளம் தெரியாம போச்சே.” என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

```
```

…….உங்கள் பீமா

தமிழ்நாடுகாங்கிரஸ் #நடிகைகஸ்தூரி #தமிழ்நாடுநாள் #actresskasthuri #ramasuganthan #inc