Friday, April 18, 2025
Home > செய்திகள் > சிறுவனை கற்பழித்த நீதிபதி..! காங்கிரஸ் ஆட்சியில் அவலம்..!

சிறுவனை கற்பழித்த நீதிபதி..! காங்கிரஸ் ஆட்சியில் அவலம்..!

1-11-21 / 16.28pm

ஒரு நீதிபதியே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 14 வயது சிறுவனை கற்பழித்த விவகாரம் காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானை பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் பொறுப்பேற்ற நாளிலிருந்து கொலை கொள்ள கற்பழிப்பு என சமூக விரோத நடவடிக்கைகள் தலைவிரித்தாடுகின்றன. இந்நிலையில் 14 வயது சிறுவனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கற்பழித்த விவகாரம் இப்போது ராஜஸ்தானை பரபரப்பாக்கியிருக்கிறது.

பரத்பூர் மாவட்ட சிறப்பு லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக பணியாற்றுபவர் ஜிதேந்திர கோலியா. இவர் மீது கடந்த ஞாயிறன்று சிறுவனை கற்பழித்ததாக போக்ஸோ வழக்கு பதிந்துள்ளது ராஜஸ்தான் காவல்துறை. காவல்துறை தரப்பு “பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் சிறுவன் டென்னிஸ் விளையாட போவது வழக்கம்.

`

அங்கு இருந்த சில பெரியவர்களுடன் சிறுவன் பழகியுள்ளான். அதையடுத்து நீதிபதி ஜிதேந்திர கோலியா வீட்டுக்கு அழைத்து சென்று சிறுவனை கற்பழித்திருக்கிறார்கள். பலநாட்களாக இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஒருநிலையில் தனது தாயிடம் அந்த சிறுவன் என்னால் வலி தாங்க முடியவில்லை என அழுதிருக்கிறான்.

பதறிப்போன அவனது அம்மா சம்பவத்தை கேட்டறிந்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். மேலும் நீதிபதியும் அவரது கூட்டாளிகளும் சம்பவத்தை வெளியில் சொன்னால் சிறுவனையும் அவனது அம்மாவையும் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார்” என கூறுகிறது.

நீதிபதி மற்றும் இருவர் மீது நேற்று காவலத்திரை வழக்கு பதிந்து விசாரணையை துவங்கியுள்ளது. மேலும் நீதிபதி ஜிதேந்திர கோலியாவை இடைக்கால நீக்கம் செய்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்து பாதிக்கப்பட்டவர்களை போலியான வழக்கில் சிறையில் அடிப்பேன் என கூறிய DSP பரமேஸ்வர் லாலும் தற்காலிக பனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

```
```

ராஜஸ்தானில் நடக்கும் தொடர் கொலைகள் கற்பழிப்புகளை பற்றி வாய்திறக்காத ராகுலும் ப்ரியங்காவுமா இந்திய மக்களை காப்பாற்ற போகிறார்கள் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா

#ராஜஸ்தான் #நீதிபதி #கற்பழிப்பு #போக்ஸோ #rajasthan #judge #pocso #rape