1-11-21 / 13.30pm
அதிமுக ஆட்சியில் பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் கோரிக்கையை ஏற்று வன்னியருக்கு உள்ஒதுக்கீடு 15% கொடுக்கப்பட்டது. அதை எதிர்த்து வழக்கு தொடுத்தவரை முதல்வர் முக ஸ்டாலின் அழைத்து உபசரித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வன்னியர் உள்ஒதுக்கீட்டை எதிர்த்து இசை வேளாளர் இளைஞர் பேரவை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இசைவேளாளர் இளைஞர் பேரவை தலைவர் கே ஆர் குகேஷ் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பில் சென்னை உய்ரநீதிமன்றம் “வன்னியருக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு செல்லாது” என அறிவித்துள்ளது.
மேலும் இசை வேளாளர் இளைஞர் பேரவை பொதுச்செயலாளர் ராஜேஸ்வரன் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா அம்மையாரின் சொந்த சகோதரர் என கூறப்படுகிறது. மேலும் இசைவேளாளர் இளைஞர் பேரவை தலைவர் கே ஆர் குகேஷ் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து பரிசு வழங்கிய செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இதுகுறித்து மருத்துவர் ராமதாஸோ அல்லது அன்புமணி ராமதாஸோ ஒரு கருத்தும் வெளியிடவில்லை என்பது வியப்பை வரவைப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர். மேலும் வழக்கு தொடுக்க மறைமுகமாக திமுக உதவியிருக்கலாம் அது தெரிந்தும் பாமக மௌனம் காக்கலாம் என குறிப்பிடுகின்றனர்.
…..உங்கள் பீமா