4-4-22/14.37PM
உத்திரபிரதேசம் : நேற்று இரவு உதிர்ப்பிரதேசமாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலுக்குள் அல்லாஹு அக்பர் என கூறிக்கொண்டு கூரிய ஆயுதத்தோடு நுழைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. அதே கோவில் வளாகத்திற்குள் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தனிப்பட்ட வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் அமைந்துள்ள கோரக்நாத் கோவில் தலைமை பூசாரியாக உள்ளார். அதே கோவில் வளாகத்தில் முதல்வரின் தனிப்பட்ட வீடும் அமைந்துள்ளது. நேற்று இரவு கோரக்நாத் கோவிலுக்குள் அத்துமீறி ஒருவன் நுழைய முயன்றான். அவனை போலீசார் தடுத்தபோது எதிர்பாரநேரத்தில் அவர்களை கூறிய ஆயுதம் கொண்டு தாக்கினான்.

அவனது பெயர் அஹமது முரதாஸா அப்பாஸி என விசாரணையில் தெரியவந்துள்ளது. சாட்சிகளின் கூற்றுப்படி அப்பாஸி கோவில் வளாகத்திற்குள் தடுப்பை மீறி நுழையமுயன்றுள்ளது. அவனை தடுத்த காவலர்களை ஆயுதத்தால் தாங்கியுள்ளான்.அதையடுத்து கோவிலின் முக்கிய நுழைவு வாயிலில் நின்றவன் அல்லாஹு அக்பர் என கத்தியிருக்கிறான். தாக்கப்பட்ட காவலர்கள் அனுராக் மற்றும் அனில் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சுதாரித்துக்கொண்ட மக்கள் அப்பாஸியை சுற்றிவளைத்து பிடித்தனர். அதன்பின்னர் அவனை அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் அவனுடன் கூட்டாளி ஒருவன் வந்திருக்கிறான். கூட்டம் அதிகரித்ததும் தப்பியோடியிருக்கிறான். அவனது பென்ட்ரைவ் லேப்டாப் விமான டிக்கெட் மற்றும் பேன் கார்டு ஆகியவை போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஏடிஜி “முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கு வருவது வழக்கம். அவரை குறிவைத்து நடந்த சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நடைபெறும் குறிப்பிட்ட நேரத்தில் முதல்வர் இங்கு இல்லை” என்றார்.
இதைத்தொடர்ந்து இன்று இந்த வழக்கு தீவிரவாத தடுப்பு போலீசாரிடம் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் கோரக்நாத் கோவில் சுற்றுப்புறத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
….உங்கள் பீமா
