Friday, June 9, 2023
Home > செய்திகள் > மாரிதாஸ் : சுப்பிரமணிய சாமி கொடுத்த ஷாக்..!

மாரிதாஸ் : சுப்பிரமணிய சாமி கொடுத்த ஷாக்..!

23-12-21/12.49pm

சென்னை : மதுரையை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு செல்லுபடியாகாது என நீதிமன்றம் உத்தரவிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே மாரிதாஸை மற்றொரு வழக்கில் தமிழக காவல்துறை கைது செய்தது.

அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்க சில பிஜேபி ஆதரவாளர்கள் தெறிக்கவிடும் சில்லறைகள் உண்மையான பிஜேபி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக மாவட்ட இளைஞரணியினர் கூறிவருகின்றனர். தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டபோது சிலர் ஆட்சியை கலைக்க வந்துவிட்டார் என்கிற ரீதியில் பேசினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மெட்ராஸ் டெலிகிராம் வாட்சப் க்ரூப்பில் விருப்பமுள்ளவர்கள் இணையுங்கள் ..

`
https://chat.whatsapp.com/Ia22Luu5IYy1iVHTjLGe8Z

மேலும் பல பைல்களை மத்திய அரசிடம் ஒப்படைத்தாகவும் சீக்கிரமே நடவடிக்கை பாயும் எனவும் ட்விட்டரில் தோன்றியதையெல்லாம் கருத்துக்களாக பதிவிட்டு வந்தனர். அதை சில அப்பாவி பிஜேபி தொண்டர்கள் நம்பிய அவலமும் நடந்தேறியது. இதை சில வலது சாரி பத்திரிக்கைகளும் ஆஹா ஓஹோ என புகழ்ந்து எழுதியிருந்தன. தமிழக தலைமை எந்த ஒரு அறிக்கையும் கொடுக்காமல் சமூக வலைத்தளங்களில் வரும் துணுக்குகளை நம்புவது அதிக ஆபத்தை விளைவிக்கும் என்பதை தோன்றியதை எழுதுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என பிஜேபி இளைஞரணியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதைவிட பெரிய கொடுமை என்னவெனில் மாரிதாஸ் வழக்கில் பாஜக பிரமுகர் மற்றும் ராஜ்ய சபா எம்பியும் வழக்கறிஞருமான சுப்ரமணிய சாமி வாதாட சென்னை வந்திருக்கிறார். அவர் தனது வழக்கறிஞர் குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எனவும் சமூக வலைத்தளமான ட்விட்டர் வாட்சப் பேஸ்புக் போன்றவற்றில் வதந்தி பரப்பிவிட்டனர்.

ஆனால் சுப்ரமணிய சாமி அதற்க்கு தனது ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக தலைமை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் கட்சி குறித்த கருத்துக்கள் வந்தால் அதை நம்பாதீர்கள் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் அறிவுரை கூறி வருகின்றனர்.

…..உங்கள் பீமா