09-01-22/16.50pm
ஸ்ரீபெரும்புதூர் : செங்கல்பட்டு இரட்டைக்கொலையில் தேடப்பட்ட குற்றவாளிகளை இரண்டுபேரை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது. அதையடுத்து கூலிப்படை தலைவன் படப்பை குணா தலைமறைவானான். அதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல்வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குணாவின் கூட்டாளிகளான போந்துர் சிவா காஞ்சிபுரம் மக்கள் இயக்க தலைவர் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் திருநாவுக்கரசு போன்றோரை காவல்துறை கைது செய்தது. மேலும் போந்துர் சிவா என்பவனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். தேடப்படும் குற்றவாளியான படப்பை குணா மீது 24 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜாமீனில் வந்த அவன் அதன்பின்னர் தலைமறைவாக உள்ளான். இதனிடையே அவனுடைய மனைவி எல்லம்மாள் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுராமங்கலத்தில் உள்ள வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அவரை கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். சரியான தகவல்கள் அவரிடமிருந்து கிடைக்கவில்லையாதலால் அவரை விசாரணைக்குப்பின் போலீசார் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் எல்லம்மாள் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் போட்டியிட்டு சுயேட்சையாக கவுன்சிலராக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு நாட்களுக்கு முன் பிஜேபி முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தலைமையில் பிஜேபியில் இணைந்துள்ளார். இது செய்திகளில் பரவலாக பேசப்படுகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைதின்போது அவருக்கு பாதுகாப்பு அளித்ததாக கிருஷ்ணகிரி பிஜேபி மேற்குமண்டல பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உதவியாளர் நாகேஷ் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய காஞ்சிபுரம் பிஜேபியினர் ” திமுகவில் உள்ள சில அமைச்சர்கள் மற்றும் பல எம்.எல்.ஏக்கள் மீது கொலை குற்றச்சாட்டே இருக்கிறது. பல திமுக நிர்வாகிகள் கொலைக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். முதலில் தங்கள் கட்சியை சுத்தப்படுத்தட்டும்” என குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் அசுர வளர்ச்சி பெற்றுவரும் பிஜேபிக்கு இதுபோன்ற விஷயங்கள் தடைக்கல்லாக அமைந்துவிட கூடாது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
……உங்கள் பீமா