14-12-21/16.35pm
கீழ்க்காணும் எட்டி விஷயங்களை நீங்கள் செய்தால் உங்கள் வாட்சப் அக்கவுண்ட் நிச்சயமாக தடை செய்யப்படும்.
உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்டிற்கு எதிராக பலர் புகார் அளித்தால் வாட்ஸ்அப் உங்களை தடை செய்யலாம். கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான அக்கவுண்ட்கள் மற்றும் அதன் சேவைகளைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக பிரபல மெசேஜிங் சர்வீஸ் ஆன வாட்ஸ் அப் சமீபத்தில் அறிவித்திருந்தது. எந்தவொரு யூஸரும் அதன் “சேவை விதிமுறைகளை” மீறுவதைக் கண்டறிந்தால், அக்கவுண்ட்கள் தடை செய்யப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெளிவாக கூறுகிறது. முன்னதாக தனது சேவை விதிமுறைகளை மீறியதற்காக 30.27 லட்சம் இந்திய அக்கவுண்ட்களை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளின்படி, கீழ்காணும் விஷயங்களை செய்வது உங்கள் அக்கவுண்ட்டை தடை செய்ய நிறுவனத்தை தூண்டலாம். மேலும் சில குற்றங்களுக்காக, கைதுகள் உட்பட சட்ட நடவடிக்கைகள் எடுக்க வசதியாக யூஸரின் மெட்டா டேட்டாவை கூட நிறுவனம் காவல்துறைக்கு வழங்கலாம் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
வாட்ஸ் அப் ஆள்மாறாட்டத்திற்கு எதிரான தெளிவான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது. நீங்கள் வேறொருவருக்காக ஒரு கணக்கை உருவாக்கி யாரோ ஒருவருக்காக ஆள்மாறாட்டம் செய்தீர்கள் என்பது உறுதியானால் அந்த அக்கவுண்ட் தடைசெய்யப்படும் என்று நிறுவனத்தின் வரைமுறையில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத ஒரு நபருக்கு நீங்கள் தொடர்ந்து அதிகமாக மெசேஜ்களை அனுப்பினால் உங்களை தடை செய்யலாம்.WhatsApp Delta, GBWhatsApp, WhatsApp Plus போன்ற தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்களை பயன்படுத்தினால் நீங்கள் வாட்ஸ் அப்பில் இருந்து நிரந்தரமாக தடை செய்யப்படலாம். தனியுரிமை பாலிசி காரணமாக மேற்கண்ட தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்கள் மூலம் தொடர்பு கொள்வதற்கு வாட்ஸ் அப் அனுமதிப்பதில்லை. எனவே எப்போதும் அதிகாரபூர்வ வாட்ஸ் அப் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பல யூஸர்கள் உங்களை block, அவர்கள் உங்கள் கான்டேக்ட் லிஸ்ட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாட்ஸ் அப் உங்களைத் தடை செய்ய கூடும். ஏனென்றால் பல யூஸர்கள் உங்களை block செய்யும் போது உங்கள் அக்கவுண்ட்டை ஸ்பேம் மெசேஜஸ் அல்லது போலி செய்திகளின் சோர்ஸாக வாட்ஸ் அப் கருதலாம். உங்கள் அக்கவுண்டிற்கு எதிராக பலர் புகார் அளிக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் உங்களை தடை செய்யலாம்.
ஆண்ட்ராய்டு ஃபோன்களில் APK ஃபைல்ஸ் வடிவில் மால்வேரை அனுப்பினால் அல்லது பிற யூஸர்களுக்கு ஆபத்தான phishing links-களை அனுப்பினால் WhatsApp உங்கள் அக்கவுண்ட்டை தடை செய்யலாம். சட்டவிரோத, போர்னோகிராபி , அவதூறான, மிரட்டல், துன்புறுத்தல், வெறுக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பும் யூஸர்கள் தடை செய்யப்படுவார்கள் என்று வாட்ஸ்அப் தெளிவாக கூறுகிறது.
ஒருவரை துன்புறுத்த அல்லது வெறுப்பு செய்திகளை பரப்ப எங்கள் தளத்தை பயன்படுத்துவதிலிருந்து விலகி இருங்கள் என்று வாட்ஸ்அப் தெளிவாக எச்சரித்துள்ளது. எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் அக்கவுண்ட் தடை செய்யப்படும் என வாட்ஸ்அப் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
….உங்கள் பீமா