14-12-21/14.55pm
சென்னை : அறிவாலய அரசுக்கு நீதிமன்றம் நல்ல பாடத்தை கற்பித்திருக்கிறது என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எழுத்தாளர் மாரிதாஸ் மதுரையில் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரை மற்றும் அரசை கேள்விகளால் துளைத்தெடுத்தார். மேலும் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ததுடன் அவர் மீது போடப்பட்ட எப் ஐ ஆராயும் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் காவல்துறையில் புகார் கொடுத்த திமுகவை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரது புகார் மனுவின் போட்டோ காப்பி ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அதில் சம்பந்தப்பட்ட நபர் சொல்லியிருக்கும் அல்லது எழுதியிருக்கும் வாசகம் நகைப்புக்குள்ளாகியிருக்கிறது. அதாவது “மாரிதாஸ் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இப்பதிவு திமுகவினர் மற்றும் பிரிவினையாளர்களுக்கு இடையில் வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார். அதாவது திமுகவும் பிரிவினையாளர்களும் என ஒரே மனோபாவத்தில் உள்ளவர்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் மாரிதாஸ வழக்கு தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் “சகோதரர் மாரிதாஸ் மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழக பிஜேபி வரவேற்பது மட்டுமில்லாமல், தேசியம் பேசக்கூடிய அனைத்து குரலுக்கும் உறுதுணையாக இருக்கும். அரசு நல்ல பாடத்தை கற்று இருக்கும் என்று நம்புகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.
….உங்கள் பீமா