27-2-22/12.14pm
மேற்குவங்கம் : மேற்குவங்கத்தில் இன்று நகராட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஐந்து மணிவரை நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வன்முறையில் இறங்கிய திரிணாமூல் கட்சி தொண்டர்கள் இந்தமுறை நேற்று முதல் பெரும் வன்முறையில் இறங்கியுள்ளனர். மேற்குவங்கத்தில் 108 நகராட்சிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தங்களை எதிர்த்து போட்டியிடும் அனைத்து எதிர்க்கட்சி வேட்பாளரகள் மீதும் வன்முறையை திரிணாமூல் தலைமை ஏவிவிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்துகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் பல வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நார்த் 24 பர்கானாஸ் கமரஹத்தி 25 ஆவது வார்டில் போட்டியிடும் சி.பி.எம். வேட்பாளர் வீட்டில் நேற்று முன்தினம் கையெறிகுண்டு வீசப்பட்டுள்ளது. கல்கத்தாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்திய திரிணாமூல் குண்டர்கள் பராக்போர் டார்ஜிலிங் மாவட்டம் ஆகிய இடங்களிலும் எதிர்கட்சிவேட்பாளர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே முன்னாள் மாநில துணைத்தலைவர் கிருஷ்ண பட்டாச்சார்யா மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர் கொன்னகர் 10 ஆவது வார்டில் திரிணாமூல் சேர்மன் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் திரிணாமூல் குண்டர்கள் கடுமையாக இவரை தாக்கியுள்ளனர். கிருஷ்ண பட்டாச்சார்யாவின் கால்கள் படுகாயமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கிருஷ்ண பட்டாச்சார்யா மீது 2017 முதல் தாக்குதல் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 2107ல் இவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வன்முறையை மனதில் கொண்டு துணை நிலை ராணுவத்தை தேர்தல் பணிக்கு அமர்த்தவேண்டி நீதிமன்றத்தை நாடியது பிஜேபி. அந்த கோரிக்கையை நேற்று முன்தினம் சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா