Thursday, March 28, 2024
Home > செய்திகள் > என்னை உயிரோடு திருப்பி அனுப்பிய முதல்வருக்கு நன்றி..! அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள்

என்னை உயிரோடு திருப்பி அனுப்பிய முதல்வருக்கு நன்றி..! அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள்

6-1-22/11.20am

பஞ்சாப் : பாரதபிரதமர் மோடி சென்ற வாகனம் மாநில அரசின் பாதுகாப்பு குறைபாடுகளால் 20 நிமிடம் பதைபதைப்பான சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அறிக்கை மற்றும் பேட்டிகள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. “பிரதமர் பயணத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்த எந்த தகவலும் வரவில்லை” என குறிப்பிட்டார். பின்னர் ஒரு வருடமாக போராடி வரும் விவசாயிகள் மீது தடியடி நடத்தி கலைக்க விரும்பவில்லை என கூறினார். மேலும் முதல்நாள் போராட்டக்காரர்களுடன் பேசி சமாதானம் செய்தேன். மறுநாள் அப்படி கூட்டம் சேர்வார்கள் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசியவர் அடுத்து கூறியது பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சன்னியின் உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தான் வரவேற்க செல்லவில்லை என செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அப்படி நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் முக கவசம் அணியவில்லை. தனிமனித சமூக விலகல் ஏதுமின்றி சாதாரணமாக சந்தித்தார் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.

`

பிரதமர் மோடி சாலைவழி பயணம் மேற்கொள்வதாக பஞ்சாப் போலிசார் போராட்ட குழுவினரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் வருகிறார் என தெரிந்து கூட போராட்டக்காரர்களுடன் தேநீர் அருந்தியுள்ளனர்.

பிரதமர் மோடியின் வாகனம் போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்ட மேம்பாலத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு பத்து கிலோமீட்டர் தூரம் என்பது மேலும் சந்தேகத்தை வலுவடைய செய்கிறது. வேளாண் சட்டங்கள் வாபஸான பிறகும் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் அந்நிய சக்திகளின் சதி இருக்குமோ என பலர் கேள்வியெழுப்புகின்றனர்.

```
```

மேலும் நடத்தப்பட்ட இந்த சம்பவத்திற்க்கு மு.க ஸ்டாலின் பினராயிவிஜயன் சந்திரசேகர் ராவ் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் மம்தா ஆகியோர் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பாரதபிரதமர் மோடி பதிண்டா விமான நிலைய அதிகாரிகளிடம் என்னை உயிரோடு திரும்ப அனுப்பிய முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்து விடுங்கள் என கூறியிருக்கிறார்.

…..உங்கள் பீமா