6-1-22/13.10pm
திண்டுக்கல் : நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்காதலனுக்கு சிலையெழுப்பி தன்னை அவதாரம் என கூறிக்கொண்டு தலைமறைவாக இருக்கும் அன்னபூரணி பற்றிய வதந்திகள் ஓய்வதற்கு முன்னரே தற்போது இன்னொரு பரபரப்பு தொற்றியுள்ளது.

திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசிப்பவர் பபிதா என்ற பவித்ரா. 42 வயதான இவர் தன்னை காளியின் அவதாரம் என கூறிக்கொண்டு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பல விடுதிகளில் தேடி வருபவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேந்த தவயோகி என்ற சாமியார் , கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருமாறு பவித்ராவை அணுகியுள்ளார். இதற்காக ரூ 5.50 லட்சம் ரொக்கம் மற்றும் 60 சவரன் நகையை பவித்ராவிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் அடுத்து பவித்ரா தவயோகியை தவிர்த்திருக்கிறார்.

நேரில் வந்து சந்தித்து பேசியும் எந்த பலனும் கிடைக்காமல் போகவே தவயோகி ஆறுமாதங்களுக்கு முன்னர்
நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவான பவித்ராவை வலைவீசி தேடிவந்தனர்.

இதனிடையே ஆரோக்கியமாதா தெருவில் இருக்கும் தனது வீட்டில் பவித்ரா பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பவித்ராவையும், அவரது தங்கையான ரூபாவதியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
……உங்கள் பீமா