3-1-22/18.25pm
கடலூர் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நெற்பயிர்கள் மீது முன்விரோதம் காரணமாக விஷமருந்து தெளித்த திமுக நிர்வாகி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அமைந்துள்ளது காரையூர் எனும் கிராமம். இங்கு சந்திரமோகன் அம்சா எனும் தம்பதிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சந்திர மோகன் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பகை உணர்வை வளர்த்துக் கொண்ட திமுக கிளைசெயலாளர் சுப்ரமணியன் சந்திர மோகனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தினமும் இரவு விஷமருந்து தெளித்து வருவதாகவும் சந்திரமோகன் தம்பதியினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய சந்திர மோகனின் மனைவி அம்சா ” தினமும் இரவு விஷமருந்தை எங்கள் வயலில் தெளித்துவிட்டு செல்கின்றனர்.
எங்களால் நிம்மதியாக சாப்பிட கூட முடியவில்லை. நாங்கள் நான்குபேரும் தற்கொலை செய்ய போகிறோம். காவல்நிலையத்தில் இதுகுறித்த புகாரை தெரிவித்தால் சமாதானமாக போகுமாறு அறிவுறுத்துகிறார்கள். ஊடகங்களாகிய நீங்களும் அரசியல்வாதிகளும் எங்களுக்கு உதவ முன்வரவேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
திமுக தலைமை சரியாக இருப்பதாக தெரிந்தாலும் இதுபோன்ற திமுக பிரமுகர்கள் செய்யும் அட்டூழியங்களால் கலைஞர் வளர்த்தெடுத்த கட்சி முக ஸ்டாலினால் காணாமல்போய்விடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா