Friday, July 12, 2024
Home > செய்திகள் > பொய் சொல்கிறாரா திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன்..? வெளிவந்த ஆதாரம்..!

பொய் சொல்கிறாரா திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன்..? வெளிவந்த ஆதாரம்..!

28-1-22/9.40am

சென்னை : கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்த மாணவியின் வழக்கை திசைதிருப்ப பல வழிகளில் திமுக முயற்சி செய்வதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கின் பாதையை மடைமாற்றும் விதமாக சிறுமி மதமாற்றத்திற்காக தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என கூறியதாக திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் சுதந்திரபோராட்ட தியாகியான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பேத்தி என ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார் திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன். வ.உ.சி யின் மகன் வ.உ.சி.வாலேஸ்வரன். அவரது மகள் மரகதம் மீனாக்ஷி. இவர் கடந்த 2020 ல் பிஜேபியில் இணைந்தார்.

`

மரகதம் மீனாக்ஷி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வேறு பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்து மருத்துவ சிகிச்சையை சிறந்தமுறையில் பார்க்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக பொய்யான தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

```
```
தமிழக அரசு குறிப்பிட்ட வ.உ.சி பேத்தி

…..உங்கள் பீமா