Friday, April 18, 2025
Home > செய்திகள் > பிரதமர் மோடியை கொல்ல சதி..! வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்.!

பிரதமர் மோடியை கொல்ல சதி..! வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்.!

19-2-22/8.40am

அஹமதாபாத் : அகமதாபாத்தில் 2008 ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலர் பலியாகினர். இது மோடியைக்கொல்ல பின்னப்பட்ட வலை என முக்கிய குற்றவாளி சாட்சியளித்துள்ளது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

2008 குண்டுவெடிப்பில் கைதான முக்கிய குற்றவாளி மாஜிஸ்திரேட் முன்பு 164 பக்க அறிக்கையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். “இந்தியன் முஜாஹிதீன் அடிப்படை நம்பிக்கை காரணமாக அவர்கள் குண்டுவெடிப்பை நிகழ்த்தி மக்களை படுகொலை செய்ய விரும்புகிறார்கள். குண்டுவெடிப்பின் பொது அவர்கள் மிக மகிழ்ச்சியாகவே இருந்தனர். அவர்களின் இலக்கு நரேந்திர மோடியே.

அடுத்தடுத்து நடக்கும் குண்டுவெடிப்பில் சிக்கிய பொதுமக்களை சிகிச்சைக்கு அனுமதிக்கும் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை காண மோடி வருவார். அப்போது அவரை கொல்லலாம் என்பதே அவர்களின் திட்டமாக இருந்தது” என அந்த முக்கிய குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடைய 77 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 2009ல் தொடங்கியது.

`

கடந்த 2021 டிசம்பரில் சிறப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணையை முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தவழக்கில் 38பேருக்கு தூக்கு தண்டனையும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இணையத்தில் பிளாட் டு கில் மோடி என ட்ரெண்ட் ஆகிவருகிறது.

…..உங்கள் பீமா

```
```

madrastelegram இப்போது கூகுள் நியூசிலும்..https://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen