5-11-21/ 13.00pm
இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு மூட்டை வெடித்து தந்தை மகன் இருவரும் உடல் சிதறி பலியாகினர். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
புதுச்சேரி அரியான்குப்பம் காக்கையான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலை நேசன்(37). இவரது மகன் பிரதீஸ் (7). காலைநேசன் தனது மனைவி ரூபனாவை பார்க்க மாமியார் ஊரான மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு வந்தார். கடந்த வியாழனன்று வந்த அவர் நேற்று தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி செல்வதாக கூறினார்.
அதையடுத்து தனது மகன் பிரதீஸுடன் பட்டாசு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருக்கும்போது இருசக்கரவாகனத்தில் இருந்த பட்டாசுகள் எதிர்பாராவிதமாக பலத்த சத்தத்துடன் வெடித்தன.

இதனால் தந்த மகன் இருவரும் வண்டியில் இருந்து தூக்கியெறியப்பட்டுஉடல் சிதறி பலியாகினர். அவர்களது உடல் 300 மீட்டருக்கும் மேலே சிதறிக்கிடந்தன. அருகே வந்த வாகனங்களும் வீட்டின் கூரைகளும் பலத்த சேதமடைந்தன. அதே சாலையில் இருசக்கர வாகனங்களில் வந்த கணேசன் சர்புதீன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.
காயமடைந்த இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பட்டாசா இல்லை நாடு வெடிகுண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனும் அவனது தந்தையும் இறந்த செய்தி கேட்டு அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதது அனைவர் நெஞ்சையும் கனக்க வைத்துவிட்டது.
……உங்கள் பீமா
#crackers #blast #viluppuram #puthusery #pondichery