Wednesday, May 20, 2026
Home > அரசியல் > நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்..! பிரபல கட்சியின் தில்லுமுல்லு..! வெளியான வீடியோ ஆதாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்..! பிரபல கட்சியின் தில்லுமுல்லு..! வெளியான வீடியோ ஆதாரம்

19-2-22/12.35pm

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை ஆறு மணிமுதல் தொடங்கியுள்ளநிலையில் சில இடங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. மேலும் சில இடங்களில் வாய்த்தகராறு ஏற்பட்டதையும் காணமுடிந்தது.

கோயம்புத்தூர் வார்டு எண் 99 ல் தேர்தல் அதிகாரி திமுகவின் ஏஜென்ட்டாக செயல்பட்டுவருவதாக புகார் எழுந்துள்ளது. பாஜக மேல் இருந்த வன்மத்தில் பார-தீய ஜனதா கட்சி என எழுதியதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை மட்டும் சிறிதாக எழுதி சர்ச்சையை கிளப்பியதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு வேட்பாளர் இதுகுறித்து ஆட்சேபணை தெரிவித்தவுடன் திருத்தி எழுதியதாக தெரிகிறது.

மேலும் பொள்ளாச்சி வார்டு எண் 9ல் வாக்குப்பதிவு நடக்கும் இடத்தின் அருகே திமுகவினர் கொட்டகை அமைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்காளர்கள் சிலர் காவல்துறையிடம் தெரிவிக்கவே காவல் அதிகாரிகள் திமுகவினரிடம் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்களும் எடுக்கிறோம் எடுக்கிறோம் என காலம்தாழ்த்தியதையும் காண முடிந்தது.

தமிழகத்தில் பல வாக்குச்சாவடிகளில் அருகே இதே போல திமுகவினர் கொட்டகை அமைத்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதாக பிஜேபியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். கோயம்புத்தூரில் இதை தட்டிக்கேட்டவர்களிடம் சண்டைக்கு நின்றதாக பொதுமக்கள் சிலர் குறைப்பட்டுக் கொண்டனர்.

கோயம்புத்தூரில் வெளியூரிலிருந்து ஆட்கள் இறக்கப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா

கூகுள் நியூசில் பின் தொடர..

https://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen