Thursday, March 28, 2024
Home > செய்திகள் > இந்திய ராணுவ தினம் ஜனவரி 15…! சிறப்பு கட்டுரை..!

இந்திய ராணுவ தினம் ஜனவரி 15…! சிறப்பு கட்டுரை..!

14-1-22/13.40PM

சென்னை : இந்திய ராணுவ தினத்தை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 15 அன்று ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் நாட்டிற்காக உயிரிழந்த வீரர்கள் மற்றும் சாகசம் புரிந்த வீரர்கள் என அனைவருக்கும் கேலண்டரி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

2022ல் தனது 74 ஆவது தினத்தை கொண்டாடப்போகும் ராணுவ தரைப்படை வீரர்களுக்கு பரிசாக இந்திய ராணுவம் புதியவகை சீருடையை வழங்க இருக்கிறது. முதலில் ராணுவத்தினத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பிரிட்டிஷ் அரசில் முதன்முதலாக லெப்டினென்ட் ஜெனரலாக பதவியேற்றுக் கொண்டவர் பீல்டு மார்ஷல் கொடண்டரா எம். கரியப்பா. இவரது நினைவை போற்றும்பொருட்டு நாடுமுழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

`

1980களுக்கு பிறகு மத்திய மோடி அரசின் கீழ் ராணுவங்களில் பல்வேறு மேம்பாடுகள் புகுத்தப்பட்டு வருகிறது. அதில் ராணுவ சீருடையும் ஒன்று. நாளை நடைபெற இருக்கும் ராணுவத்தினத்தை முன்னிட்டு இந்த சீருடை ராணுவ தரைப்படைக்கு வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே இலகுரக நவீன ரக துப்பாக்கிகள் ராணுவத்தில் மேம்படுத்தப்பட்ட நிலையில் இந்த சீருடை மாற்றம் பெரிதும் வரவேற்புக்குள்ளாகியிருக்கிறது.

இந்த நவீன ஆடை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மூலம் தயார் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய காடுகள் மலைகள் பனிப்பிரதேசங்கள் மற்றும் வெப்பமான பகுதிகள் ஆகியவற்றின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற வகையில் செயல்படுமாறு உடைகள் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் பிரத்யேக சிறப்பாகும். இந்த சீருடை டிஜிட்டல் வடிவத்தின் அடிப்படையை கொண்டதாகும்

```
```

பனிப்பிரதேசத்தில் உடை வெப்பத்தை கொடுப்பதாகவும் வெயில் நிலங்களில் காற்றோட்டமானதாயும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த துணிக்கான மதிப்பீடு ராணுவத்தால் அங்கீகரிக்கப்பட்டு நாளை ராணுவத்தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஆண் பெண் என இருபாலினத்தவருக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகே பாலிஸ்டிக் தலைக்கவசம் நவீன ரக தொலைத்தொடர்பு வசதிகள் வெடிகுண்டுகளை சேகரிக்க மற்றும் மணல் பிரதேங்களில் நடக்க ஏதுவான ஷூக்கள் சிப்பாய்களுக்கு வழங்கப்படுகின்றன. முன்பெல்லாம் இதில் சில வசதிகள் அட்டாக் டீம் வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா