13-11-21/ 6.03am
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினியை ஆபாசமாக மற்றும் கண்ணியக்குறைவாக தரமற்றமுறையில் யூடியூபர் பேசியதாக திமுக ஆதரவாளர்கள் இணையத்தில் போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.
ப்ளிப்ப்ளிப் எனும் யூட்யூப் சேனல் ஆபாச மற்றும் அருவருப்பான வார்த்தைகளை பேசி வீடியோ வெளியிட்டு வருகிறது. இந்த சேனலை பெண்களோ குழந்தைகளோ பார்க்க முடியாத அளவிற்கு ஆபாச வசனங்கள் நிறைந்திருக்கும்.இந்நிலையில் இந்த சேனலில் அண்ணாத்த படத்தை பற்றி கருத்து கூறுகிறேன் என்கிற பெயரில் ரஜினிகாந்தை மிகவும் ஆபாசமாக பேசியுள்ளனர்.
`
படத்தை விமர்சிக்கிறேன் என கூறிவிட்டு குடிகார கிழட்டு கபோதி எனவும் மேலும் ஒரு பீப் வார்த்தையும் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் இந்த சேனலை சேர்ந்தவர்களை நேரில் அழைத்து பாராட்டினார் முதல்வர் முக.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
``````
….ஸ்டீபன் தங்கதுரை