Tuesday, May 19, 2026
Home > செய்திகள் > SDPI மற்றும் PFI அமைப்புகளுக்கு பயிற்சி..? சிக்கலில் பினராயி

SDPI மற்றும் PFI அமைப்புகளுக்கு பயிற்சி..? சிக்கலில் பினராயி

2-4-22/11.52AM

கேரளா : சர்ச்சைக்குரிய இஸ்லாமிய அமைப்புகளான SDPI மற்றும் PFI அமைப்புகளுக்கு பயிற்சிஅளித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி முதல்வர் பினராயி விஜயனுக்கு பெரும் சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.

கடந்த மாதம் இடுக்கியில் உள்ள கரிமன்னூர் காவல்நிலையத்தை சேர்ந்த பி.கே.அனஸ் எனும் காவலர் ஒருவர் இஸ்லாமிய அமைப்பான எஸ்.டி.பி.ஐ க்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபியை சேர்ந்த 150 பேரின் விவரங்களை கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதையடுத்து காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர்கொடுத்த தகவலின் பேரில் சில ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் தாக்கப்பட்டனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் கேரள தீயணைப்புத்துறை சார்பில் SDPI மற்றும் PFI அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாநில பிஜேபி தலைவர் சுரேந்திரன் ” மாநில தீயணைப்புத்துறை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான SDPI மற்றும் PFI அமைப்புகளுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்று பயிற்சி அளித்துள்ளது. இந்த இரு இஸ்லாமிய அமைப்புகளும் சில தீவிரவாத செயல்களில் தொடர்புடையது.

இந்த அடிப்படைவாத ஜிஹாதி அமைப்புகளுக்கு பயிற்சியளித்தது சமரசம் செய்யமுடியாத ஒன்று” என குறிப்பிட்டுள்ளார். பிஜேபியின் தொடர் குரலை தொடர்ந்து முதல்வர் பினராயி தீயணைப்புத்துறை டிஜிபி சந்தியாவிடம் இதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். ” இது கவனக்குறைவால் நடந்த ஒன்று.

இதில் தொடர்புடைய அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோழிக்கோட்டில் நடந்த பண்பாட்டு திருவிழாவில் அவர்கள் அழைக்கப்பட்டதாக தெரிகிறது” என குறிப்பிட்டார். மாநில பிஜேபி தலைவர் சுரேந்திரன் இந்த சம்பவத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா