12-11-21/19.40pm
திருவிக நகர்: சென்னை திருவிக நகர் மக்கள் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ போட்டோவையாவது காமிங்க என பிஜேபி தலைவரிடம் கேள்வியெழுப்பியது பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
சென்னை மட்டுமல்லாமல் அதன் பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். முதல்வரின் கோபாலபுரம் வீட்டருகே வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் போட்கிளப் பகுதிகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. திமுகவினரிடம் தங்கள் கோரிக்கைகளை எழுப்ப மக்கள் அச்சப்படுகின்றனர். எங்கே தாக்கிவிடுவார்களோ என அச்சப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு நிவாரண உதவி வழங்க சென்ற பிஜேபி தொண்டர்களை மிரட்டிய அரங்கேறியது. இன்று கோரிக்கை எழுப்பிய பொதுமக்கள் திமுகவினரால் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியது. மழைஆரம்பித்த நாளிலிருந்து பிஜேபி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மக்களுக்கு இடைவிடாது நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பிஜேபி ஐடி விங் மாநில தலைவர் நிர்மல் குமார் நிவாரணப்பொருட்கள் வழங்க திருவிக நகர் சென்றார். அங்கு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் திருவிக நகர் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அவர் எஸ்எஸ் புறம் முதலாவது தெருவில் மக்களுக்கு நிவாரணப்பொருள் வாங்கிக்கொண்ட மக்கள் சிலர் கேட்ட கேள்வி திகைக்க வைத்துவிட்டது.
நிர்மல் குமாரிடம் ” எங்க தொகுதி எம்.எல்.ஏ போட்டோவையாவது காமிங்க. அவர ஒட்டு கேட்டு வரும்போது பாத்தது. என்னோட போட்டோவ மறக்காம அனுப்பிவைங்க” என கூறினர். நிர்மல் அவர்கள் சிரித்துக் கொண்டே சரி அனுப்புகிறேன். உங்கள் தொகுதி எம்.எல்.ஏ யாரென நாங்கள் உங்களுக்கு அடையாளம் காண்பிக்கிறோம் என கூறிவிட்டு நகர்ந்தார். திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த சிவகுமார் என்கிற தாயகம் கவி என்பது குறிப்பிடத்தக்கது.
……உங்கள் பீமா