Monday, November 11, 2024
Home > செய்திகள் > பெரியபட்டினம் : நாங்கள்தான் வெடிமருந்து கடத்தினோம்..! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

பெரியபட்டினம் : நாங்கள்தான் வெடிமருந்து கடத்தினோம்..! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

7-12-21/6.48am

பெரியபட்டினம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியபட்டினம். இங்குள்ள PFI நிர்வாகிகள் வெடிகுண்டுகளை கடத்தியதாக பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெரியபட்டினத்தில் இயங்கிவரும் PFI அமைப்பின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் அஸ்கர் மற்றும் பைரூஸ். இவர்களது கூட்டாளியாக இருந்தவர் வசீருல் மைதீன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மற்ற இரு நிர்வாகிகளுக்கும் சமீபகாலமாக மோதல்போக்கு நிலவி வந்துள்ளது. இதையடுத்து நேற்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் வெளிநாட்டிலிருந்து வரும் நிதியை அவர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும் அப்பாவி முஸ்லீம்களை தீவிரவாதியாக மாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஜூட் என்ற இலங்கை நபரிடமிருந்து பெட்டி பெட்டியாக வெடிகுண்டுகளை கடத்தி வந்ததாகவும் கூறியுள்ளார்.

`

மேலும் இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட வெடிகுண்டுகள் எங்கெல்லாம் பதுக்கப்பட்டன என்பதை விலாவாரியாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அஸ்கர் மற்றும் பைரூஸ் இருவரும் தனது மனைவி மீது பொய்யான வழக்கு போட்டிருப்பதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார். தான் அப்ரூவராக விரும்புவதாகவும் இந்திய தூதரகத்தை அணுக போவதாகவும் தெரிவித்துள்ளார்.

```
```

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுத்து அப்பாவி இஸ்லாமியர்களை காப்பாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

….உங்கள் பீமா