Friday, June 2, 2023
Home > செய்திகள் > காவிக்கொடி கேட்ட காங்கிரஸ்…!? கொடிநாள் வரலாறு சிறப்பு கட்டுரை..!

காவிக்கொடி கேட்ட காங்கிரஸ்…!? கொடிநாள் வரலாறு சிறப்பு கட்டுரை..!

7-12-21/11.08am

இந்தியா : டிசம்பர் 7 இந்திய ராணுவத்தால் மட்டுமன்றி ஒவ்வொரு இந்திய குடிமகனாலும் கொடிநாள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய திருநாட்டின் முப்படைகளிலும் பங்கேற்று தியாக உணர்வோடு எவ்வித பாகுபடுமின்றி தேசத்தைக் காக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தேசக்காவலர்களை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7அன்று கொடிநாள் தினமாக கொண்டாடி வருகிறது.

இந்திய தேசியக் கொடிகளை ஆசிரியர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இளைஞர்கள் மூலமாக விற்று, அதன் மூலமாக கிடைக்கும் நிதியை ராணுவ வீரர்களின் மேம்பாட்டுக்கு இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

அண்டை நாடுகளுடனான போர் மற்றும் எல்லை பாதுகாப்பு பணியில்  தனது இன்னுயிரை இழந்து, கை,கால், கண் என உடலுறுப்புக்களை இழந்து தவிக்கும் தேசக்காவலர்களின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டும் இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கொடிநாள் அன்று நன்கொடை திரட்டி ராணுவ வீரர்களுக்கு அளித்து அவர்களை கௌரவிக்கிறது.

`

வெயில் சுட்டெரிக்கும் பாலைவனத்திலும் மைனஸ் 4° செல்சியஸ் குளிரிலும் உயரமான மலைகளிலும் உப்புக்காற்றை மட்டுமே சுவாசிக்க முடிந்த கடல்புறங்களிலும் தேசத்தை மக்களை காக்க அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ராணுவ வீரர்களை கௌரவிக்க இந்த ஒரு நாள் மட்டுமே போதாது.

இந்திய தேசிய கொடியின் வரலாறு சுவாரசியமானது. 1904 அன்று நிவேதிதா அவர்கள் ஒரு கொடியை உருவாக்கினார். 1906ல் ஆகஸ்ட் 7 அன்று சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு அதற்கு கல்கத்தா கொடி என பெயரிடப்பட்டது.

பின்னர் 1907ல் பைக்கஜி காமா அம்மையாரால் தேசியக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாலகங்காதர திலகர் மற்றும் அன்னி பெசன்ட் அம்மையார் இருவரின் கூட்டு முயற்சியில் மூவர்ண கொடி உருவாக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

1916ல் ஆந்திர மாநில மசூலிப்பட்டிணத்தை சேர்ந்த பிங்கலி வெங்கையா அவர்களால் உருவாக்கப்பட்ட தேசியக் கொடியை மகாத்மா காந்தி அங்கீகரித்தார். இந்த கொடியும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை.  முழு கொடி காவி வண்ணத்திலும் நடுவில் ராட்டை இருக்குமாறும் வலியுறுத்தியது.  பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பிங்கலி வெங்கையா வடிவமைத்த தற்போதைய மூவர்ணக்கொடி அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது.

கொடிநாள் தினமான இன்று நம்முடைய பங்கை தவறாமல் அளித்து நமது எல்லை தெய்வங்களை கௌரவப்படுத்துவோம்.

#ஜெய்ஹிந்த்

…….உங்கள் பீமா