Friday, September 22, 2023
Home > செய்திகள் > மீண்டும் அட்டூழியம்…! காவல்துறை அத்துமீறல்…! பலியான முதியவர்…!

மீண்டும் அட்டூழியம்…! காவல்துறை அத்துமீறல்…! பலியான முதியவர்…!

7-12-21/6.08am

விழுப்புரம் : காவல்துறையினர் தாக்கி கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் நடந்த மறுநாளே மீண்டும் ஒரு முதியவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் எனும் கிராமத்தில் கூரை அமைத்து வயதான தம்பதிகளான லோகநாதன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுண்டல் வியாபாரம் செய்து வந்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர் லோகநாதனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அவர்களது மகன் விவரிக்கையில் “5.12.21 மதியம் மூணு மணிக்கு அரகண்டநல்லூர் போலீஸ்டேஷன்லருந்து நாலு போலீஸ்காரங்க வந்தாங்க. இங்க கடையெல்லாம் போட கூடாதுன்னு சொல்லி எங்க அம்மாவை அடிக்க ஒரு போலீஸ் கைய ஓங்கிருக்காங்க. அதை எங்க அம்மா தடுத்துருக்காங்க.

`

உடனே எங்க அப்பா வயசானவங்கள ஏன் அடிக்கறீங்கன்னு கேட்ருக்காரு. அந்த நேரத்துல பக்கத்துல இருந்த போலீஸ் ஒருத்தர் அப்பாவோட நெஞ்சுல லத்திய வச்சு குத்திருக்காரு. அங்கயே அப்பா உயிர் போய்டுச்சு” என அழுதுகொண்டே கூறினார்.

காவல்துறையின் தொடர் அத்துமீறலால் ஒரே வாரத்தில் இரண்டு உயிர் பறிபோயுள்ளது. இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சாத்தான் குளம் கொலை வழக்கில் பொங்கி எழுந்த எந்த ஒரு அரசியல் தலைவருமோ அல்லது ஊடகங்களோ இதைப்பற்றி வாய்திறக்காமல் இருப்பது மக்களிடையே பலத்த சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.

…..உங்கள் பீமா.