Friday, June 2, 2023
Home > செய்திகள் > அதிக கூலி கேட்டு கம்யூனிஸ்டுகள் போராட்டம்..! கேரளாவை விட்டு பெப்சி ஓட்டம்..!!

அதிக கூலி கேட்டு கம்யூனிஸ்டுகள் போராட்டம்..! கேரளாவை விட்டு பெப்சி ஓட்டம்..!!

கேரளாவை விட்டு ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய குழந்தைகள் ஆடை தயாரிப்பு நிறுவனமான கிட்டெக்ஸ் கேரள அரசின் நெருக்கடியால் நிறுவனத்தை வேறு மாநிலத்திற்கு கொண்டுசென்றது. அதன் பணியாளர்களை தனி விமானம் மூலம் அழைத்துக்கொண்டது. ஏதோ தாலிபான்களிடம் இருந்து மக்களை இந்திய காப்பாற்றியது போல தனது பணியாளர்களை கிட்டெக்ஸ் நிறுவனம் மீட்டது.

தற்போது அடுத்த கார்ப்பரேட் நிறுவனமான பெப்சி & கோ கேரளாவிலிருக்கும் தனது நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்துள்ளது. கேரளா பாலக்காட்டில் பெப்சி & கோ வின் வருண் பீவரேஜஸ் இயங்கிவருகிறது. இங்கு பணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க பணியாளர்கள் அதிக கூலி கேட்டு இந்த ஆண்டு பிப்ரவரி முதல் போராட்டத்தை ஆரம்பித்து நிறுவனத்தை மூட வைத்துவிட்டனர்.

பிப்ரவரி முதல் நிறுவனம் இயங்காமலேயே இருப்பதால் பொறுத்து பொறுத்து பார்த்த பெப்சி & கோ நேற்று தனது நிறுவனத்தை மூடப்போவதாக மாநில தொழில் துறை அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மாதம் கூலி அதிகம் கேட்டு இஸ்ரோ அனுப்பிய அதி முக்கிய ஆராய்ச்சி சாதனங்களையே கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் நடுரோட்டில் மறித்து சிறைப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெப்சி & கோ நிறுவனம் உத்திரபிரதேசம் மதுராவில் தனது நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து முதற்கட்ட பணிகள் ஆரம்பித்துவிட்டன. இதுகுறித்து பேசிய பெப்சி & கோ செய்தி தொடர்பாளர்” எங்கள் நிறுவனத்தின் உருளைக்கிழங்கு சிப்ஸ் சந்தையில் முன்னணியில் உள்ளது. கேரளாவில் கூலி அதிகம் கேட்டு போராடி நிறுவனத்தை மூட வைத்து விட்டார்கள்.

`

அதனால் தலைமை நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் உத்திரப்பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்கிறோம். அங்கு தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரவசதி சாலை வசதி உட்பட பலவற்றை மாநில அரசு வழங்க முன்வந்திருக்கிறது.

வருடம் 1.50,000 டன் உருளைக்கிழங்குகளை மாநிலத்திலேயே குறைந்த விலையில் பெற முடியும். மேலும் தொழிலாளர்களின் கூலி கேரளாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. அரசு பல சலுகைகளை தர முன்வந்திருக்கிறது.” என குறிப்பிட்டார்.

கிட்டெக்ஸ் ஆடை நிறுவனமும் உத்திரபிரதேசத்தில் 800 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தெரிகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டரில் வாருங்கள் கிட்டெக்ஸ் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி என பதிவிட்டிருக்கிறார்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களின் தவறான கொள்கையால் பல பெரிய நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு தாவ தயாராக இருக்கின்றன. தமிழக அரசு தமிழர்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என நினைத்தால் இதைப்போன்ற சர்வதேச நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்க முனைப்பு காட்ட வேண்டும்.

….உங்கள் பீமா