17/12/21/ 12.23pm
கர்நாடகா : கட்டாய மதமாற்றம் இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்துவருகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என அறிக்கை சமர்ப்பித்த அரசு அதிகாரியை இடமாறுதல் செய்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கட்டாய மதமாற்றம் நிகழ்ந்துவருவதாக மேலும் மேலும் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இதை கருத்தில் கொண்ட கர்நாடக அரசு மதமாற்ற தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் கட்டாய மதமாற்றம் குறித்து விசாரணை செய்ய அதிகாரிகளை அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைத்திருந்தது.
இதனிடையே சித்திரதுர்கா மாவட்டம் ஹோசதுர்கா பகுதியை ஒட்டிய இரு கிராமங்களில் 2000 பேருக்கும் மேலானோர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து திப்பேசாமி எனும் தாசில்தாரை அரசு ஆய்வு மேற்கொள்ள நியமித்தது. ஆனால் அவர் கொடுத்த அறிக்கை அரசை ஆடிப்போக செய்தது. கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என அறிக்கை கொடுத்தது மட்டுமல்லாமல் மதமாற்றமே நடைபெறவில்லை என அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய கர்நாடக பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் “சட்டமன்ற உறுப்பினர் ஹூலிகட்டி சந்திரசேகர் தாயாரே கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து சேகர் முயற்சியால் மீண்டும் தாய்மதம் திரும்பினார். அதிக குடும்பங்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கிறது” என குறிப்பிட்டார்.
மேலும் அறிக்கை சமர்ப்பித்த திப்பேசாமி அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரக்கூடாது என கிறித்தவ மிஷனரி அமைப்பினர் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மிஷனரி அமைப்பை சேந்த பாதிரியார்கள் பிஷப்புகள் மதமாற்றம் எங்கள் உரிமை அதை தடுக்க உரிமையில்லை என கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவதில் அதிதீவிரமான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மசோதா தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் அமுலுக்கு வர இருப்பதாகவும் மேலிட தகவல்கள் தெரிவிக்கின்றன.
…..உங்கள் பீமா