Monday, December 2, 2024
Home > செய்திகள் > மாமூல் தராததால் கடை சூறையாடல்..! கட்சி தொண்டர்கள் கைவரிசை..! வெளியான வீடியோ..!

மாமூல் தராததால் கடை சூறையாடல்..! கட்சி தொண்டர்கள் கைவரிசை..! வெளியான வீடியோ..!

சில அரசியல் கட்சிகள் மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடாமல் தங்கள் கட்சியினர் முன்னேற்றத்திற்க்கே பாடுபடுகின்றனர் என பெரும்பாலான மக்கள் விமர்சித்துவருகின்றனர். அதற்கேற்றாற்போல நேற்று முன்தினம் தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் திமுகவினர் பெண்ணின் தாவணியை இழுத்து மாமூல் கேட்டு கடையை சூறையாடி பின்னர் மக்கள் கவனிக்க வேண்டியவிதத்தில் கவனித்து அனுப்பினர்.

இதே போல ஒரு சம்பவம் நேற்று மஹாராஷ்டிரா பிம்ப்ரி சிஞ்சவாட் பகுதியில் நடந்தேறியுள்ளது. சரத்பவார் தலைமையிலான நேஷனல் காங்கிரஸ் பார்ட்டியின் தொண்டர்கள் பிம்ப்ரி சிஞ்சவாட் பகுதியில் அமைந்துள்ள ஒரு துணிக்கடையில் புகுந்து மாமூல் கேட்டிருக்கின்றனர்.

கடைக்காரர் தர மறுக்கவே அந்த குண்டர்கள் இரும்பு கம்பியை கொண்டு அவரை தாக்கிவிட்டு கடையை சூறையாடினர். கைக்கு ஒன்றும் கிடைக்காத விரக்தியில் கடையில் போடப்பட்டிருந்த சேர்களை திருடிக்கொண்டு ஓடினர்.

`

இதுகுறித்து கடைக்காரர் காவல்துறையில் CCTV வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்தார். தாக்கியவர்கள் உள்ளூர் NCP கட்சி பிரமுகர்கள் என்பதால் வழக்கை காவல்துறை எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அதனால் கடைக்காரர் இன்று வியாபாரிகள் நலசங்கத்தை அணுகியுள்ளார்.

```
```

சிவசேனா ஆட்சிக்கு வந்தது முதல் மும்பை புனே உள்ளிட்ட பல மாநிலங்களில் சமுகவிரோத செயல்கள் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக NHRC அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா