Saturday, October 5, 2024
Home > செய்திகள் > நதீம் ஹைதர் மாமனாரை வெளுத்து வாங்கிய பிஜேபி எம்பி..! இப்படியா சொன்னார்..?

நதீம் ஹைதர் மாமனாரை வெளுத்து வாங்கிய பிஜேபி எம்பி..! இப்படியா சொன்னார்..?

4-12-21/6.10am

டெல்லி : நதீம் ஹைதர் மாமனாரும் பிஜேபி பிரமுகருமான சுப்ரமணிய சாமியை பிஜேபி எம்பி வெளுத்து வாங்கிவிட்டார்.

சமீபகாலமாக பிஜேபி மற்றும் பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் சுப்ரமணிய சாமி. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேரடியாக மம்தாவை சந்தித்த சுப்ரமணிய சாமி மமதாவை உச்சிகுளிர பாராட்டினார். நெட்டிசன்கள் சு.சாமி பதிவில் அவரை ஒருவழியாக்கிவிட்டார்கள்.

இதனால் நான் என்ன தப்பாக சொல்லிவிட்டேன் என பதிவு போடுமளவிற்கு நொந்து போனார். இந்நிலையில் மீண்டும் ஒரு பொய்யை கூறி வசமாக சிக்கிக்கொண்டார். அவர் ” அருணாச்சல பிரதேச பிஜேபி எம்பியான டபீர் கவ்வை பாராளுமன்றத்தில் சந்தித்தேன். அருணாச்சல பிரதேச மக்கள் தங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என கூறுகிறார்கள். மேலும் சீனாவின் துருப்புகள் MACMAHON எல்லைக்குள் நுழைந்துவிட்டன. மாநிலத்தின் தெற்கு பகுதியை ஆக்கிரமித்துவிட்டன.” என பிஜேபி அருணாச்சல பிரதேச எம்பி குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

`

ஆனால் அருணாசல பிரதேச எம்பி டபீர் கவ் கூறுகையில் ” சு.சாமி எதற்க்காக பொய் சொல்கிறார் என தெரியவில்லை. பாராளுமன்றத்தில் டிசம்பர் 2ல் அவரை சந்தித்தேன். சீன ஊடுருவலை பற்றி என்னிடம் அவர் கேள்வியெழுப்பினார். நான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1962 காலகட்டத்தில் இரண்டு மூன்று இடங்களில் ஊடுருவிய சீன துருப்புகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டன. ஆனால் தற்போது அப்படி எதுவும் சம்பவம் நடைபெறவில்லை” என தெரிவித்தார்.

```
```

சுப்ரமணிய சாமி தனக்கு நிதித்துறை அமைச்சர் பதவி வழங்காத காரணத்தினால் தொடர்ந்து இப்படி அவதூறாக பேசிவருகிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா