15-12-21/12.43pm
சூரத் : டேஸ்ட் ஆப் இந்தியா என்கிற பெயரில் பாகிஸ்தானி உணவுத்திருவிழா என்ற பேனர் மற்றும் பத்திரிக்கைகளில் ஒரு தனியார் நிறுவனம் விளம்பரம் கொடுத்திருந்தது. அதையடுத்து நடந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
டேஸ்ட் ஆப் இந்தியா எனும் உணவகம் டிசம்பர் 12 முதல் 22 வரை பாகிஸ்தானி உணவுத்திருவிழா நடத்திவருகிறது. அந்த நிறுவனம் சூரத் ரிங் ரோட்டில் உணவுதித்திருவிழா அனைவரும் வாருங்கள் என நகர் முழுவதும் பிரமாண்டமாக விளம்பரப்பலகைகளை வைத்திருந்தது. நேற்று அந்த இடத்திற்குள் புகுந்த பஜ்ரங்தள் அமைப்பினர் அந்த உணவகத்தை சூறையாடினர்.

மேலும் அங்கிருந்த பேனர்களை தீவைத்துக் கொளுத்தினர். சமீபத்தில் அங்கிருந்த மசூதி ஒன்றில் கூடிய இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என குரலெழுப்பி சர்ச்சை எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேலும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பேனர்கள் விளம்பரப்பலகைகள் வைத்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கையெழுப்பி வருகின்றனர்.
மேலும் இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் ஆதரவாக குரல் எழுப்பி வந்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா