Friday, June 2, 2023
Home > செய்திகள் > கலவரத்தை தூண்டியதாக பெண் நிருபர்கள் கைது …! கதறும் ராணா அய்யூப்..!

கலவரத்தை தூண்டியதாக பெண் நிருபர்கள் கைது …! கதறும் ராணா அய்யூப்..!

14-11-21/ 19.10pm

திரிபுரா : இரு மத பிரிவினருக்கிடையே மோதல் உருவாகும் விதத்தில் செய்தி வெளியிட்ட நிருபர்கள் இருவர் மீது திரிபுரா காவல்துறை FIR பதிவு செய்துள்ளது.

ராணா அய்யூப் சர்தீப்தேசாய் உட்பட சில இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் உட்பட பலர் திரிபுரா சம்பவத்தை திரித்துக் கூறி செய்தி வெளியிட்டும் ட்வீட் செய்து வருகின்றனர். இதை நம்பி பல அப்பாவி முஸ்லிம்கள் வன்முறையை கையிலெடுத்து ஆங்காங்கே கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊடகவியலாளர்களின் உள்நோக்கத்தோடு கூடிய பதிவால் மஹாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு போடும் அளவிற்கு சூழ்நிலை மோசமாகிவிட்டது. இந்நிலையில் திரிபுரா காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மத மோதல் உருவாகும் விதத்தில் பதிவிட்ட வழக்கறிஞர்கள் நிருபர்கள் உட்பட 108 பேர் மீது வழக்கு பதிந்து அவர்கள் கணக்கை முடங்கியுள்ளது.

`

மேலும் மூல காரணமாக இருந்த இரு பெண் பத்திரிக்கையாளார்களான சம்ரிதி சாக்கினியா மற்றும் ஸ்வர்ணா ஜா ஆகியோர் மீது FIR பதியப்பட்டுள்ளது. மேலும் அவர்களை மதமோதல் உருவாகும் விதத்தில் பொய்யான செய்திகளை வெளியிட்டது மற்றும் உள்நோக்கத்தோடு மதமோதல் உருவாக காரணமாக இருந்தது ஆகிய பிரிவின் கீழ் சிறையிலடைத்ததாக சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அரிந்தம் நாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராணா அய்யூப் ட்விட்டரில் பொங்கி எழுந்துள்ளார். அவர் மீது இன்னும் ஏன் வழக்கு தொடுக்கவில்லை என நெட்டிசன்கள் திரிபுரா காவல்துறையை நோக்கி கேள்வியெழுப்பி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் ” கோமதி மாவட்டம் திரிபுராவில் மசூதி இடிக்கப்பட்டதாக பரவி வரும் வதந்தி உண்மையில்லை.

மக்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும்.” என தெரிவித்துள்ளது. இருந்தாலும் ராணா போன்ற விரும்பத்தகாத நிருபர்கள் மற்றும் ராகுல் அறிக்கை போன்ற காரணிகளால் மஹாராஷ்டிராவில் நிலைமை மோசமாகி வருகிறது. சிவசேனா அரசு ஒட்டு வங்கி பாதிக்கும் என கருதியும் காங்கிரசை குளிர்விக்க வேண்டியும் அமைதி காப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.

….உங்கள் பீமா