Friday, March 29, 2024
Home > செய்திகள் > முகநூல் பதிவு…! கடமையை செய்த காவல்துறை..!

முகநூல் பதிவு…! கடமையை செய்த காவல்துறை..!

26-2-22/10.53am

கோவில்பட்டி : முகநூல் பதிவில் ஈ.வே.ராமசாமி வேஷமிட்ட குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்ததாய் கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றில் ஈ.வே, ராமசாமி வேஷமணிந்து குழந்தைகள் சிலர் கலந்துகொண்டனர். அதுகுறித்து கோவிப்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் என்பவர் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார். அதில் “பெரியார் வேஷமிட்டு இந்த நாலு குழந்தையை அடித்துக்கொன்று நாலுமுக்கு ரோட்டில் தூக்கில் தொங்கவிடவேண்டும்.

`

அப்போது தான் மற்ற குழந்தைகளுக்கு பயம் வரும். பெற்றோருக்கும் பயம்வரும், ஏன் வ.உ.சி. நேதாஜி தேவர் பாரதி வேஷம் போடமுடியாதோ” என பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவர்மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் குழந்தைகளுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

```
```

அதே நேரத்தில் பிரதமர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து நிகழ்ச்சியை ஒளிபரப்பிவரும் தனியார் தொலைகாட்சிகள் மீதும் திமுக காவல்துறை தனது இரும்புக்கரத்தை பயன்படுத்த வேண்டும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா